🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அம்மாடியோவ்... திருச்சி மலைக்கோட்டையின் வயது இவ்வளவு கோடி ஆண்டுகளா?

அம்மாடியோவ்... திருச்சி மலைக்கோட்டையின் வயது இவ்வளவு கோடி ஆண்டுகளா?

திருச்சி என்றால் அனைவருக்கும் உடனடியாக ஞாபகம் வருவது மலைக்கோட்டை மீது உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில். ஒரு தொல்பழங்கால மலைப்பாறை ஒன்றன்மீது கட்டப்பட்ட கோட்டை, கோயில்கள் என்பவற்றைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ளது. திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது இந்த மலைக்கோட்டையாகும். இது அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது.

சிராப்பள்ளி என்பதே திருச்சிராப்பள்ளியின் முந்தைய பெயர். சிரா எனும் சமண முனிவரின் பெயரால் அமைந்த ஊர். பள்ளி எனும் சொல் சமண மதத்திற்கானது. இந்த நகரில் அமைந்துள்ள மலைக்கோட்டையின் வயது நிலவியல் ஆய்வுகளின் அடிப்படையில் 3400 மில்லியன் (340 கோடி) ஆண்டுகள் என்கிறது அறிவியல். பூமியின் வயது 450 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிடப்படும் நிலையில், 340 கோடி ஆண்டுகள் கம்பீரமாக வீற்றிருக்கும் மலைக்கோட்டை மனித குலம் தோன்றியதிலிருந்து நடைபெற்றுவரும் தொடர் மாற்றங்களை கண்டு வரும் ஒரே சாட்சியாக உள்ளது.

தகவல் உதவி: இராமன் சரபேஷ்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved