🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராஜகம்பளத்தாருக்கு தனி நலவாரியம் அமைத்திடுக! தமிழக அரசுக்கு கோரிக்கை.

தமிழகத்தில் வாழும் இராஜகம்பளத்தார் சமுதாயத்தினருக்கு தனி நலவாரியம் அமைக்கக்கோரி தமிழக அரசை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சமூகநீதி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், மூத்த தலைவருமான மத்திய பொதுப்பணித்துறை ஓய்வுபெற்ற இயக்குநர் பெ.ராமராஜ் அவர்கள் தெரிவித்திருப்பதாவது,

தமிழக சட்டமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பல்வேறு துறைகளுக்கான மானியக்கோரிக்கை விவாதங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மீதான மானியக்கோரிக்கை அடுத்த மாதம் 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இன்று (29.03.2023) தலைமைச்செயலகத்தில் அத்துறையின் அமைச்சர் இராஜகண்ணப்பன் அவர்களை செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் அவர்கள் முன்னிலையில் த.வீ.க.பண்பாட்டுக்கழக நிர்வாகிகள் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் சந்தித்து தொட்டிய நாயக்கர் ராஜ கம்பள சமுதாயம் மக்களுக்கு. கல்வி வேலை வாய்ப்பு பொருளாதாரம் அரசியல் ரீதியான விழிப்புணர்வு பெறுவதற்காக கம்பளத்தார் சீரமைப்பு நல வாரியம் அமைத்துத்தருமாறு வலியுறுத்தி மனு அளித்தனர்.

பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சருடனான சந்தித்திப்பின்போது, ஏன் கம்பளத்தார் சீரமைப்பு நலவாரியம் வேண்டும் என்கிற அவசியத்தை விளக்கமாக எடுத்துக் கூறியதையடுத்து, இக்கோரிக்கை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு இக்கோரிக்கையை கொண்டு சென்று நல்ல தீர்வைப் பெற்றுத்தருவதாக அமைச்சர் உறிதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் கள்ளர் சீரமைப்பு வாரியம், நரிக்குறவர் நல வாரியம், சீர்மரபினர் நலவாரியம், தமிழ்நாடு வாஃபு வாரியம் மற்றும் எடப்பாடியாரின் ஆட்சியின் இறுதியில் அமைக்கப்பட்ட முத்தரையர் நல வாரியங்கள் உள்ளிட்ட பல வாரியங்கள் செயல்பட்டு வருகிறது. இக்கோரிக்கையின் அடிப்படையில் தனி வாரியம் அமைக்கும் பட்சத்தில் தனி நிதி ஒதுக்கீடு மற்றும் வாரியத் தலைவர் பதவி உள்ளிட்ட பலன்கள் கிடைப்பதற்கு வாய்ப்புக்கிட்டும். 

அமைச்சருடனான சந்திப்பின்போது பொறியாளர் ராமராஜ் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் உடனிருந்தனர். இதேகோரிக்கையோடு  உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களை நேற்று (28.03.2023) சந்தித்து மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved