🔴 LIVE | முப்பெரும் விழா 2023


நாளை முதல் உயரும் சுங்கக்கட்டணம்! சாமானியரை கொள்ளையடுக்கும் அரசு!

தற்போது சுங்கச் சாவடிகளில் ஒரு கிலோமீட்டருக்கு 2.19 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. நாளை (ஏபரல் 1)  முதல் சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்கிறது. இதனால் தனியார் வாகனங்களின் கட்டணமும் உயரும் என்ற பயமும் பயணிகளிடையே ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது.  சுங்கச்சாவடிகளையும் அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு நிர்வகித்து வருகிறது.  இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி நாளைமுதல் இந்தியா முழுவதும் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவு சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணம் 5 - 10 சதவிகிதம் உயருகிறது.

சுங்கக்கட்டண உயர்வைத் தொடர்ந்து படிப்படியாக எல்லாவித பொருட்களின் விலையும் ஏற்றப்படும் என்பதால், ஏற்கனவே வேலையின்மை, தொழில்துறை நசிவு காரணமாக வாழ்க்கை நடத்துவதற்கே சிரமப்பட்டு வரும் பொதுமக்கள் மிகுந்த கவலைக்குள்ளாகியுள்ளனர். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved