🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அப்படியா!..... அணுஉலையில் 65% வெப்ப ஆற்றல் வீணாகிறதா?

அணுமின்சக்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி செய்வது மூன்றில் ஒரு பங்கு வெப்பசக்தியே [சுமார் 35% இயக்கத் திறன்] [EFFICIENCY]. குளிர்கலனில் TURBINE CONDENSER] 65% வெப்பசக்தி பயன் தராமல் கடல் தணிப்பு நீரிலோ , கோபுரத்திலோ [CONDENSER COOLING WATER] வீணாகிறது. இந்த 65% வெப்பசக்தி மீட்கப்பட்டு பல தொழிற்துறை ஆலைகளுக்குப் பயன்படுகிறது. முக்கிய கடல் சார்ந்த பகுதிகளில் உப்பு நீக்கி குடிநீர் தயாரிக்க முடிகிறது மேலும் எரிசக்தி நீரக வாயு [HYDROGEN GAS], மீதேன் [METHANE GAS] தயாரிக்கவும், குளிர் நாடுகளில் வீடுகளுக்குச் சூடு அளிக்கவும், தொழிதுறை ஆலைகளுக்கு நீராவி அனுப்பவும் உதவுகிறது. ஜப்பானில் இயங்கி வரும் உச்ச உஷ்ண அணு உலை [HTTR] [HIGH TEMPERATURE TEST REACTOR] மின்சாரம் தயாரிப்ப தோடு, பயன்படா சக்தி மீட்கப்பட்டு நீரக வாயு, மீதேன் வாயு தயாரிக்கப் படுகிறது. இம்முறைக்கு கூட்டுப்பிறப்பு [cogeneration] முறை என்று பெயர். கூட்டுப்பிறப்பு முறையின் இயக்கத் திறன் 80%.

தற்போது 10% உலகத் தேவைக்கு அணுசக்தி நிலையங்கள் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன குளிர் நாடுகளான ரஷ்யா, பல்கேரியா, ஹங்கேரி, ருமேனியா, செக் குடியரசு,சுலோவேகியா,சுவிட்சர் லாந்து,யுக்ரேன் வீடுகளைச் சூடாக வைத்திருக்க அணுமின்சக்தி நீராவி பயன்படுகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved