🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அமலாக்கத்துறை வழக்குகளின் பாய்ச்சல் 2555 சதவீதமாக உயர்வு!

கடந்த 4 ஆண்டுகளில் அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை 505 சதவீதம் உயர்ந்துள்ளதாக நிதி அமைச்சக புள்ளிவிபரங்கள் வாயிலாகத் தெரிய வந்துள்ளது. குறிப்பாக அரசியல் தலைவர்கள் உட்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2018-19-ல் 195 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், 2021-22-ம் ஆண்டில் அது 1180 வழக்குகளாக அதிகரித்துள்ளது. 

அதேநேரம் அமலாக்கத்துறை நடத்திய சோதனை எண்ணிக்கையும் 2004-14 மற்றும் 2014-22ம் ஆண்டுக்கு இடையில் 2 ஆயிரத்து 555 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 2004-14ம் ஆண்டுக்கு இடையில் 112 இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில் 2014-22ம் ஆண்டுக்கு இடையில், மட்டும் 2 ஆயிரத்து 974 இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளன. சோதனைகள் மற்றும் வழக்குகளின் அடிப்படையில் 95 ஆயிரத்து 432 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., போன்றவைகளை அரசியல் ஆயுதங்களாக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதே நேரத்தில் பணமோசடியைத் தடுப்பதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நிதி நுண்ணறிவைச் சேகரிப்பதற்கான மேம்பட்ட அமைப்புகளையும் காட்டுகிறது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

மேலும் நிலுவையில் உள்ள பழைய வழக்குகளில் விசாரணை நடத்துவது மற்றும் பண மோசடி வழக்குகளில் விசாரணை நடத்துவது ஆகிய காரணங்களால் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு காரணம் என தெளிவுபடுத்தி உள்ளது.

இந்நிலையில் அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறி எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கை கடந்த சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved