🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோவிட்-19, விடையை சொல்லுங்க-பரிசை அள்ளுங்க ” இரண்டாம் சுற்று- பதிலும்- வெற்றியாளர்களும்

#வீரசக்கதேவி_துணை:-

————————————————————–

#இரண்டாம்சுற்றில்_வெற்றிபெற்ற_கோவில்பட்டி_அருண்ராமகிருஷ்ணன்அவர்களுக்கும்

#சமமதிப்பெண்பெற்ற_சரவணாபுரம்புஷ்பகணேஷ்_அவர்களுக்கும்_வாழ்த்துக்கள்..

பரிசு இருவருக்கும் பிரித்துக்கொடுக்க ஆலயக்கமிட்டியால் முடிவு செய்யப்பட்டுள்ளது…

===============================================

இரண்டாம்சுற்று கேள்விகளுக்கான பதில்கள்:

1, கம்பிள பேரரசை நிறுவியவர் யார்?

மும்மடி சிங்கயநாயக்கர்

2, கம்பிள பேரரசின் தலைநகர் எது?

தற்போது கர்நாடகாவிலுள்ள கம்பிளி

3, கம்பிள பேரரசு ஆரம்பிக்கப்பட்ட வருடம் என்ன?

கி.பி. 1280

4, கம்பிள பேரரசின் கடைசி மன்னர் யார்?

கம்பிளதேவா/கம்பிளராயர்

5, கம்பிள பேரரசு முடிவுற்ற ஆண்டு எது?

கி.பி. 1327

6, விஜயநகர பேரரசை நிறுவியவர் யார்?

ஹரிஹரர் , புக்கர்

மேலே உள்ள கேள்விக்கான பதில்கள் “தொட்டிய நாயக்கர் தகவல் களஞ்சியம்” என்ற இணையதளத்தில் உள்ளது.

7, விஜயநகர பேரரசு ஆரம்பித்தது எந்த ஆண்டு?

கி.பி. 1336

8, மூஸ்லீம்கள் படையெடுப்பின்போது, விஜயநகர பேரரசின் உதவியை நாடிய பாண்டிய மன்னரின் பெயர் என்ன?

வீரபாண்டியா

9, விஜயநகர பேரரசின் இளவரசர் குமாரகம்பணர் தெற்கே ஒரு நதிக்கரைவரை வந்தார், அந்த நதியின் பெயர் என்ன?

தாமிரபரணி

10, குமாரகம்பணரின் மனைவியின் பெயர் என்ன?

கங்காதேவி

11, குமாரகம்பணரின் மனைவி சமஸ்கிருத மொழியில் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன?

மதுராவிஜயம்

12, மதுரை நாயக்க பேரரசின் முதல் மன்னர் யார்?

விஸ்வநாத நாயக்கர்

13, மதுரை நாயக்கர் பேரரசை விஜயநகரிலிருந்து பிரித்து சுகந்திர நாடாக பிரகடனம் செய்தவர் யார்?

திருமலை நாயக்கர்

14, காவிரியின் குறுக்கே, மைசூரில் கட்டிய அணையை உடைத்து தென்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்க மதுரையிலிருந்து படை அனுப்பியவர்

யார்?

ராணி மங்கம்மாள்

15, திருமலைநாயக்கரின் நினைவுநாள் எது?

04-மாசி-விளம்பி/1 0-02-1659

16, மதுரை நாயக்க பேரரசின் தலைநகர் மதுரை என்பதை நாம் அறிவோம். ஆனால் சிலசமயம் தலைநகராக வேறொரு நகரம் இருந்துள்ளது, அதன் பெயர் என்ன?

திருச்சிராப்பள்ளி

17, மதுரை நாயக்க பேரரசின் கடைசி ராணி யார்?

ராணி மீனாட்சி

18, மதுரை நாயக்க பேரரசை சூழ்ச்சிசெய்து வீழ்த்தியவர் யார்?

சந்தாசாகிப்

19, திருமலைநாயக்கர் காலத்தில் வாழ்ந்த கட்டபொம்மன்களின் பெயர் என்ன?

விஜயரகுபதி, துரைராஜபொம்மு, வீரதளவாய், விஜயரகுநாதன், குமாரவீரன், ரணவீரராமு

20, கண்டி பேரரசின் கடைசி மன்னர் கண்ணுசாமி நாயக்கர் நினைவுதினம் எப்போது?

30-01-1832

21, பாஞ்சாலங்குறிச்சிக்கு ஆதரவாக இருந்ததால், வெள்ளையரால் கொல்லப்பட்ட, காடல்குடி பாளையக்காரா்கள் இருவரின் பெயர் என்ன?

வீரகஞ்ஜெய நாயக்கர், குசலவீரகஞ்ஜெய நாயக்கர்

22, காடல்குடி பாளையக்காரா்கள் தண்டிக்கப்பட்ட ஆண்டுகள் யாவை?

கி.பி. 1799 & கி.பி. 1801

23, தமிழக அரசால் நினைவுஸ்துாபி அமைத்து போற்றப்படும் நல்லப்பசாமி அவர்கள் எந்த பாளையத்தை சேர்ந்தவர்?

காடல்குடி

24, நல்லப்பசாமி அவர்களின் திருஉருவப்படத்தை “இயல்−இசை−நாடக மன்றத்தில் திறந்து வைத்து மரியாதை செலுத்திய முதல்வர் யார்?

முன்னாள் முதல்வர் M.G. ராமசந்திரன்

25, நல்லப்பசாமி அவர்களின் உருவப்படத்தை தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் திறந்து வைத்து மரியாதை செய்த முதல்வர் யார்?

முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா

26, நல்லப்பசாமி அவர்களின் உருவப் படத்தை சென்னை கவர்னர் மாளிகையில் திறந்து வைத்து மரியாதை செய்த கவர்னர் யார்?

பீஷ்ம நாராயண் சிங்

27, “…நல்லப்பசாமி என்றும் நலின் குரல் பாண்டியனே− இனி உன்னை வெல்லப்பன் யாரப்பா

மயிலும் ஈடில்லை உன் வடிவழகில்

குயிலும் ஈடில்லை உன் குரல் இசையில்

பழம் பெரும் கவிதைகள் நான் பாடினாலும்

குரல்வளம் கொடுத்தாள் உனக்கு கலைவாணியே…” என்று பாடிய தேசியக்கவி யார்?

முண்டாசு கவிஞர்/மகாகவி பாரதியார்

28, கம்பன் இல்லா இடத்தை நிரப்பிய “கவிராச பண்டிதர்” செக வீரபாண்டியனாரின் சொந்த ஊர் எது?

தூத்துக்குடி மாவட்டதிலுள்ள ஒட்டநத்தம்

29, செக வீரபாண்டியனாரின் முதல் நூல் எது?

மாசிலாமணி மாலை

30, செக வீரபாண்டியளாரின் வீரகாவியம் எத்தனை வெண்பாக்களை கொண்டது?

3811

31, செக வீரபாண்டியனாரின் தர்மதீபிகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வெளிநாட்டவரின் பெயர் என்ன?

மிஸ்டர். நியுமென்

32, செக வீரபாண்டியனாரின் நூலை நாட்டுடமை ஆக்கிய முதல்வரின் பெயர் என்ன?

முன்னாள் முதல்வர். கலைஞர் மு. கருணாநிதி

33, செக வீரபாண்டியனாரின் நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் எவை?

1 அகத்திய முனிவர்

2 அணியறுபது

3 கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-1

4 கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-2

5 கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-3

6 கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-4

7 கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-5

8 கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-6

9 கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-7

10 கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-8

11 கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-10

12 கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-11

13 கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-12

14 கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-13

15 கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-14

16 கம்பன் கலை நிலை உரைநடை தொகுதி-15

17 கல்வி நிலை

18 கவிகளின் காட்சி தொகுதி-1

19 தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-1

20 தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-2

21 தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-3

22 தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-4

23 தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-5

24 தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-6

25 தரும தீபிகை – செய்யுள் மூலமும் உரையும் தொகுதி-7

26 திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-1

27 திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-2

28 திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-3

29 திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், அறத்துப்பால் தொகுதி-4

30 திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-1

31 திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-2

32 திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-3

33 திருக்குறள் குமரசே வெண்பா – செய்யுள் மூலமும் உரையும், பொருட்பால், தொகுதி-5

34 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்-பாகம்-1

35 பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்-பாகம்-2

36 வீரகாவியம்

குறிப்பு:−

மூன்றாம் சுற்றிலும் அனைவரும் கலந்து கொள்ளலாம். மூன்றாம் சுற்றிற்கான பதில் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 21−04−2020.

அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்: 7010014851

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved