🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அகாடமி வளர்ர்சி நிதி! தேடி வந்து உதவும் தெய்வங்கள்!

கோவை அருகேயுள்ள கோணவாய்க்கால் பாளையம்  பகுதியைச் சேர்ந்த திரு.சுப்பிரமணியம் - திருமதி. புவனா ஆகியோரின் மகள் எஸ்.வித்யா கனகராஜ். இவர் கோவையிலுள்ள நாராயணகுரு கலை அறிவியல் கல்லூரியில இளங்கலை அறிவியல் பட்டமும், ஜிஆர்ஜி ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் கல்லூரியில் எம்பிஏ பட்டமும் பெற்று பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியிலுள்ள பிரபல விப்ரோ நிறுவனத்தில் "மேனேஜர்" ஆக பணியாற்றி வருகிறார்.

பெங்களூருவில் வசித்துவரும் திருமதி.வித்யா, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தப்பட்ட முப்பெரும் விழா'2023  ன் நேரடி ஒளிபரப்பை யூடியூப் வழியாக பார்த்துள்ளார். அப்போதே மகளிரணி அமைப்பாளரைத்  தொடர்பு கொண்டு "பெரிய கார்ப்பரேட் கம்பெனிக மாதிரி பக்காவா பிளான் பண்ணி பண்றீங்களே , இதை யாரு பண்றாங்க என்று வியந்துபோய் விசாரித்துள்ளார். 

மீண்டும் ஓரிரு நாள் கழித்து கோவை மாவட்ட மகளிரணி அமைப்பாளர் திருமதி.பாக்கியலட்சுமியை மீண்டும் தொடர்பு கொண்டு, நம்ம சமுதாயத்தில் கூட இப்படியெல்லாம் நடக்குதா என்று ஆச்சரியத்தோடு வித்யா கேட்டுள்ளார். இதனையடுத்து சங்கத்தின் செயல்பாடுகள், கட்டபொம்மன் அகாடமி சார்பில் 11 நபர்களுக்கு  குரூப் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக வழங்கப்பட்டு வருவது குறித்தும், மேலும் முப்பெரும் விழாவிற்கு முன்பாக கடந்த ஆண்டு கூடுதலாக 25 லட்சம் மதிப்பில் சங்கத்திற்காக நிலம் வாங்கப்பட்டது குறித்தெல்லாம் மகளிரணி அமைப்பாளர் அவரிடம் விளக்கமாகக் கூறியுள்ளார். 

இதையெல்லாம் கேட்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்த வித்யா, 

நீங்களெல்லாம் கிராமத்திலிருந்து சமுதாயத்திற்காக இவ்வளவு வேலை பார்த்திருக்கீங்க...

நானும் சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும்...

உங்களுக்கு (சங்கத்திற்கு) என்ன உதவி வேண்டுமென கேட்டுள்ளார்.  

ஒன்னும் அவசரமில்லை...இப்பத்தான் விழா முடிஞ்சிருக்கு... நீ இன்னும் நல்லா தெரிஞ்சுட்டுங்கூட அப்புறம் ஏதாவது செய் என்று பாக்கியலாட்சுமி தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து கோடை விடுமுறைக்காக தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ள வித்யா மகளிரணி அமைப்பாளர் பாக்கியலட்சுமியை நேற்று (30.04.2023) சந்தித்து கட்டபொம்மன் அகாடமி வளர்ச்சி நிதியாக ரூபாய் 10000/- (ரூபாய்.பத்தாயிரம் மட்டும்) வழங்கினார்.

திருமதி.வித்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ள தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், முப்பெரும்விழாவுக்கு முதுகெலும்பாக இருந்த கோவை மாவட்ட மக்கள் கட்டபொம்மன் அகாடமி வளர்ச்சியிலும் அக்கறையோடு இருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், அதனைத் தொடங்கி வைத்துள்ள வித்யா வுக்கு நன்றி  தெரிவிப்பதாக கூறியுள்ளார். இதேபோல் அகாடமி வளர்ச்சி நிதியளித்துள்ள வித்யா வுக்கு ஒருங்கிணைப்பாளர் கே.டி.மோகன்ராஜ், இணை ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

கோவையிலிருந்து எம்.சிவக்குமார், இணை ஒருங்கிணைப்பாளர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved