🔴 LIVE | முப்பெரும் விழா 2023


போடிநாயக்கனூரில் எழுந்தருளியுள்ள அன்னை வீரசக்கதேவி ஆலய திருக்குடமுழுக்கு!

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் வட்டம், கீச்சொக்கநாதபுரம் கிராமத்தில் இராஜகம்பளத்தார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு வீரஜக்கம்மாள் திருக்கோயிலில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் நாளை மறுநாள் சித்திரை மாதம் 9ஆம் தேதி (22-04-2024) திங்கட்கிழமை காலை 8:30  மணி முதல் 10:10  மணி வரை வெகு விமர்சையாக நடைபெறவுள்ளது.  

சிவனடியார்கள் சர்வசாதகம் சண்முகம் - வைத்தியநாதசிவம் ஆகியோர் தலைமையேற்று நடத்தி வைக்கும் மஹாகுபாபிஷேகத்தின் முதல் நிகழ்ச்சியாக இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் விநாயகர் பூஜை, வாஸ்து சாந்தி, கிராம சாந்தி, புண்யாக வாஜகம், இடசுத்தி ஆகியவை நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணியளவில் மஹாகணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மஹாபூர்ணஹீதி, தீபாரதனை நடைபெறவுள்ளது.


இதன் தொடர்ச்சியாக மாலை புண்யாகவாஜனம் , எஜமான சங்கல்பம், கலாகர்சனம், யாகசால பிரவேசம், துவார சக்தி பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

மீண்டும் திங்கள் காலை 7 மணியளவில் கணபதி பூஜை, துவாரசக்தி பூஜை, லட்சுமி பூஜை நிகழ்ச்சியுடன் துவங்கி கோபூஜை, மூலமந்திர ஜபம், யாத்ரா தானம், தீபாரதனை முடிந்து 9.50 மணிக்கு விமான கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து மூலஸ்தான மகாஅபிஷேகம், தீபாரதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. 


இறுதியாக காலை 11 மணியளவில் அன்னதான நடைபெறவுள்ளது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கிராம நாட்டாமை தலைமையில் இராஜகம்பளத்தார் சமுதாய விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். வீரஜக்கதேவி கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு அன்னையின் அருள்பெறுமாறு சமுதாய உறவுகளுக்கு விழாக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved