🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோவிட்-19 “விடையைச் சொல்லுங்க-பரிசை அள்ளுங்க” முதல்சுற்று விடைகளும்-மதிப்பெண்களும்

முதல்சுற்றில் கேட்கப்பட்ட கேள்விகளும்-விடைகளும்

#வீரசக்கதேவிதுணை.

========================================

முதல் சுற்றில் வெற்றிபெற்ற மகேஷ்வரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்…!!!

முதல் சுற்று கேள்விகளுக்கான பதில்கள் வருமாறு:−

1, இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடி யார்?.

வீரபாண்டிய கட்டபொம்மன்.

2, வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர் என்ன?

ஜெகவீரபாண்டிய திக்விஜய கட்டபொம்மன்.

3, வீரபாண்டிய கட்டபொம்மனின் தாயார் பெயர் என்ன?

ஆறுமுகத்தம்மாள்.

4, வீரபாண்டிய கட்டபொம்மனின் உடன் பிறந்தவர்கள் பெயர் என்ன?

1, ஊமைத்துரை/குமாரசாமி நாயக்கர்

2, துரைசிங்கம்/சிவத்தையா/சுப்பா நாயக்கர்

3, ஈஸ்வரவடிவு

4, துரைக்கண்ணு.

5, வீரபாண்டிய கட்டபொம்மனின் முதல் போர்களம் எது?

பாஞ்சாலங்குறிச்சி1783புல்லட்டா்ன் படையெடுப்பு.

6, வெள்ளையர்கள் நேரடி நிர்வாகத்திற்கு வந்த ஆண்டு என்ன?

12-06-1792.

7, கட்டபொம்மன் அறியணை ஏறியது எந்த ஆண்டு?

அறியணை ஏறியது

20-தை-கொல்லம் ஆண்டு 965

30-01-1790.

8, வீரபாண்டிய கட்டபொம்மனின் மந்திரியின் பெயர் என்ன?

தானாதிபதி சிவசுப்ரமணியம்பிள்ளை.

9, வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவியின் பெயர் என்ன?

வீரசக்கம்மாள்.

10, வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் என்ன?

03-01-1760.

11, வீரபாண்டிய கட்டபொம்மன் எதற்காக வெள்ளையரை எதிர்த்தார்?

சுதந்திர உணர்வின் காரணமாக

கப்பம்/வரி கட்ட மறுத்து…

12, வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டி கொடுத்தது யார்?

ஜெகவீரராமகுமார எட்டப்பன்.

13, வீரபாண்டிய கட்டபொம்மனை பிடித்து கொடுத்ததது யார்?

விஜயரகுநாத தொண்டைமான்.

14, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்கு தண்டணை விதித்தது யார்?

அலெக்ஸாண்டர் ஜான் பானர்மேன்.

15, வீரபாண்டிய கட்டபொம்மனுக்காக உயிர் துறந்த பாளையக்காரர்கள் யார், யார்?

காடல்குடி வீரகஞ்ஜெய நாயக்கர், நாகலபுரம் செளந்திரபாண்டிய நாயக்கர்.

16, வீரபாண்டிய கட்டபொம்மனால் கொல்லப்பட்ட வெள்ளையர்கள் பெயர் என்ன?

கிளர்க், டக்லஸ், டார்மிக்ஸ், காலின்ஸ், பிளாக்கி, பின்னி & மெக்டவல்.

17, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடைக்கலம் கொடுத்த பாளையம் எது?

கோலார்பட்டி.

18, அடைக்கலம் தந்தவரின் பெயர் என்ன?

ராஜகோபால் நாயக்கர்.

19, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவிய பாளையங்கள் எவை?

காடல்குடி, குளத்தூர், நாகலாபுரம், கோலார்பட்டி

ஏழாயிரம் பண்ணை.

20, வீரபாண்டிய கட்டபொம்மனின் கொள்கைகள் என்ன?

வரிகொடாமை/ஒத்துழையாமை/

வெள்ளையனே வெளியேறு போன்ற…

21, வீரபாண்டிய கட்டபொம்மன் “வானம் பொழிகிறது… ” என்று யாரிடம் பேசினார்?

வில்லியம் காலின்ஷ் ஜாக்சன்.

22, மேற்கூறிய சம்பவம் நடந்த இடம் எங்குள்ளது?

ராமலிங்கவிலாசம், இராமநாதபுரம்.

23, வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்டது எந்த தேதி?

16-அக்டோபர்.

24, வீரபாண்டிய கட்டபொம்மனை துாக்கிலிட்ட ஆண்டு?

1799.

25, துாக்கிலிட்ட இடத்தின் பெயர்?

கயத்தாறு.

26, தூக்கிலிட்ட இடத்தில் நினைவு ஸ்துாபி நிறுவியது யார்?

செவாலியர். சிவாஜி கணேசன்.

27, அந்த இடத்தில் நினைவு மண்டபம் நிறுவியது யார்?

முன்னாள் முதல்வர். ஜெ. ஜெயலலிதா.

28, பாஞ்சாலஞ்குறிச்சி நினைவு கோட்டையை நிறுவியது யார்?

முன்னாள் முதல்வர். கலைஞர் மு. கருணாநிதி.

29, முதல் தொல்லியல் ஆய்வு செய்தவர் யார்?

ராபர்ட் ஸ்வல்.

30, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் டைரக்டர் யார்?

ஸ்ரீ.. பிஆர். பந்துலு.

31, வசனகர்தா யார்?

ஸ்ரீ.. சக்தி கிருஷ்ணசுவாமி.

32, தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் என்ன?

பத்மினி பிக்சர்ஸ்.

33, அப்படம் வெளிவந்த ஆண்டு?

1959.

#முதல்சுற்றில்40க்கும்அதிகமதிப்பெண்பெற்றவர்களின்விவரம்_இணைக்கப்பட்டுள்ளது..

குறிப்பு:−

இரண்டாம் சுற்றிலும் அனைவரும் கலந்து கொள்ளலாம்.

அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்: 7010014851

கடைசி தேதி: 09-04-2020

இதில் தேர்ந்தெடுக்கப்படும் வரலாற்று ஆர்வமுள்ள 40நபரை இரண்டு நாள் சுற்றுலாவாக கொடைக்கானல் அழைத்துச் சென்று, கடைசி அரைநாள் வரலாற்று கருத்தரங்கம் நடத்தப்படும். இப்படிக்கு

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்கமிட்டி,

பாஞ்சாலங்குறிச்சி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved