🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ரயில்களிலும் வெளிநாடு செல்லலாம் - எந்தெந்த ரயில் நிலையங்களில் இருந்து தெரியுமா?

இந்தியாவில் 7 ரயில் நிலையங்களில் இருந்து வெளிநாடு செல்லும் ரயில்கள் எங்கு அமைந்து உள்ளது என்று தங்களுக்கு தெரியுமா?

பொதுவாக வெளிநாடு செல்வதற்கு விமானம் மூலம் தான் செல்ல வேண்டும். ஆனால், ரயில் மூலமும் செல்லலாம் என்று உங்களுக்குத் தெரியுமா?

ஹல்டிபாரி:

ஹல்டிபாரி (Haldibari) ரயில் நிலையம் மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ளது. புதிய ஜல்பைகுரி நிலையத்தின் மற்றொரு நிலையமாக இந்த ரயில் நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து வங்கதேசத்திற்கு வெறும் 4.5 கி.மீ தூரம் தான். இங்கிருந்து எளிதாக வங்கதேசத்திற்குச் செல்லலாம்.

ஜெய்நகர் ரயில் நிலையம்:

ஜெய்நகர் ரயில் நிலையம் (Jaynagar station) பீகார் மாநிலம் மதுபானியில் அமைந்துள்ளது. இங்கிருந்து நேபாளத்திற்கு ரயில் செல்கிறது. இப்பகுதி மக்கள் அதிகளவில் நேபால் செல்ல இந்த ரயில் நிலையத்தில் இருந்து செல்லும் ரயிலைத் தான் பயன்படுத்துகின்றனர்.

பெட்ராபோல்:

பெட்ராபோல் (Petrapole) ரயில் நிலையத்தில் இருந்து வங்கதேசத்திற்கு எளிதாகச் செல்லலாம். இந்த ரயில் நிலையம் முதன்மையாக இரண்டு நாடுகளுக்கு இடையே சரக்கு ஏற்றுமதி இறக்குமதிக்குப் பயன்படுத்தப்படுகிறது.

சிங்காபாத்:

சிங்காபாத் (Singhabad) ரயில் நிலையம், மேற்கு வங்காளத்தில் உள்ள மால்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து வங்கதேசத்திற்கு ரோகன்பூர் வழியாக ரயில் செல்கிறது.

ஜோக்பானி:

ஜோக்பானி (Jogbani) ரயில் நிலையம் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து நேபாளத்துக்கு ரயில் செல்கிறது. மேலும் ரயில் மூலம் மட்டும் அல்ல இங்கிருந்து நடந்தே கூட நேபாளத்துக்கு செல்லலாம்.

ராதிகாபூர்:

ராதிகாபூர் (Radhikapur) ரயில் நிலையம் சரக்கு போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. இந்த ரயில் நிலையம் ஜீரோ பாயின்ட் ரயில் நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இது மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து வங்கதேசத்திற்கு ரயில்கள் செல்கின்றன.

அட்டாரி ரயில் நிலையம்:

அட்டாரி ரயில் நிலையம் ( Attari Station) மிகவும் பிரபலமானது. இது பஞ்சாபில் அமைந்துள்ளது. வடக்கு ரயில்வேயில் கீழ் இந்த நிலையம் செயல்படுகிறது. இங்கிருந்து சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் என்ற ரயில் பாகிஸ்தானுக்குச் செல்கிறது. வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த ரயில் மூலம் பாகிஸ்தானுக்குச் செல்லலாம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved