🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமுதாய வளர்ச்சிக்காக லட்சங்களில் உதவும் இராஜகம்பளத்து உறவுகள்!

இராஜகம்பளத்தார் சமுதாயத்தில் கல்வி, தொழில், நீதித்துறை, நிர்வாகத்துறை என அனைத்திலும் முன்னனி வகிக்கும் மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டம் குறிப்பிடத்தக்கது. நாமக்கல் மாவட்டம் பெற்ற இந்த வளர்ச்சியை ஒட்டுமொத்த சமுதாயமும் பெற வேண்டும் என்ற பெரும் கனவோடு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளையில் சுமார் 800 க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

இதற்கிடையே இடைப்பட்ட காலத்தில் அறக்கட்டளையின் தலைவராக இருந்த ஓய்வுபெற்ற டிஎஸ்பி.ரங்கசாமி அவர்களின் திடீர் மறைவு, அறக்கட்டளை துவங்க ஊக்கமளித்துவந்த ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை தலைமைப்பொறியாளர் நல்லப்பன், மக்கள் தொடர்பு அதிகாரி சக்திவேல் உள்ளிட்டோரின் அடுத்தடுத்த மரணங்கள் அறக்கட்டளையின் வேகத்தில் சற்று தொய்வை ஏற்படுத்தியது. இந்த இக்கட்டான சூழலில் மூத்த தலைவர்கள் ஒன்றிணைந்து அறக்கட்டளைப்பணிகளை தொடர்ந்து சீரோடும் சிறப்போடும் நடத்தி வருகின்றனர். 

iஇதன் மத்தியில், வன்னியர் 10.5 விழுக்காடு இடஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வரை சென்று முழுமையான இடஒதுக்கீட்டை மீட்டெடுத்து வந்ததில் நாமக்கல் தொட்டியநாயக்கர் சமுதாய அறக்கட்டலையின் பங்களிப்பு அளப்பரியது. மேலும், அனைத்து பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை ஒன்றிணைத்து சமூகநீதி கூட்டமைப்பை உருவாக்கியது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், மாநாடு, சட்டப்போராட்டம், டிஎன்டி ஒற்றைச்சான்றிதழுக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள் என சமுதாயத்தின் அனைத்து பிரச்சினைகளிலும், கொரோனா பெருந்துயர் சூழ்ந்த வேளையிலும் வருங்கால தலைமுறையின் நலன்கருதி தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை முன்னத்தி ஏர் ஆக செயலாற்றி வந்தது.

மேலும், சகோதர அமைப்புகளோடு நல்லுறவு பாராட்டுவதிலும் எடுத்துக்காட்டாக விளங்கும் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, சென்னை, வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள கட்டபொம்மன் அகாடமியின் கட்டுமானப்பணிகள் நிதிப்பற்றாக்குறையால் தொய்வுற்றிருந்த வேளையில் உதவிக்கரம் நீட்டியதோடு, கடந்த ஜனவரி 29 இல் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற முப்பெரும் விழாவை வெற்றிகரமாக நடத்திட இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தோடு தோளோடு தோளாக இருந்து நடத்திக்காட்டியது.

இவ்வாராக அறக்கட்டளை தொடங்கப்பட்டதிலிருந்து சமுதாயத்தின் ஒவ்வொருநிலையிலும் தன் இருப்பை காலத்தின் கல்வெட்டுகளில் செதுக்கி செயலாற்றிவரும் நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை, தற்போது அறக்கட்டளைக்கென சொந்தமாக நிலம் வாங்கத் தீர்மானித்து, அதை நிறைவேற்றும் முனைப்பில் செயலாற்றி வருகிறது. நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் அருகில் சுமார் அரைக்கோடி மதிப்பில் 5.5 சென்ட் நிலத்தை கிரயம் செய்யும் பணியில் முழுவீச்சில் இறங்கியுள்ளது. அறக்கட்டளையின் இந்த முயற்சிக்கு நாமக்கல் வாழ் இராஜகம்பளத்தார் சமுதாய உறவுகள் தங்களால் இயன்ற பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அறக்கட்டளையின் முயற்சிக்கும், சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் இன்றுவரை உதவியுள்ள சொந்தங்கள் பட்டியலை அறக்கட்டளை வெளியிட்டுள்ளது. அதன்படி ரூபாய் ஒருலட்சம் நிதியுதவி அளித்துள்ளோர் விவரம் வருமாறு,

1.திரு.மு.பழனிசாமி, தலைவர், தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, நாமக்கல்.

2.திரு.பொ.துரைசாமி, செயலாளர், தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை. போடிநாயக்கன்பட்டி ராசிபுரம்.

3.திரு.சி.சின்னுசாமி, பொருளாளர்,  தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை, சாலப்பாளையம் நடந்தை.

4.திரு.மு.சரவணன் அமைப்புச்செயளாளர், அக்கமாபாளையம். திருச்செங்கோடு.

5.திரு.பொ.மணி, தலைமையிடச் செயளாளர், அன்புநகர், நாமக்கல்.

6.திரு.சி.தங்கவேல் (அன்னை),மல்லுமாசம் பட்டி.

7.திரு.ர.முத்துசாமி (மெடிக்கல்), 2/39-மெயின்ரோடு, புதுச்சத்திரம்.

8.திருமதி.ஜெயாமனோகர், சின்னதொட்டிபட்டி கல்யாணி அஞ்சல் நாமக்கல்.

9.திரு.பொ.தங்கவேல், 5/149-1சுவாமிநகர் நாமக்கல். 

10.திரு.ப.கதிர்வேல், 1/58 எர்ரப்பநாயக்கன்பாளையம் திருச்செங்கோடு. 

11.திரு.சி.துரைமுருகன், 7/76/3 ஸ்ரீ பாலாஜி லட்சுமிநகர் குட்டிமேய்க்கம்பட்டி திருச்செங்கோடு. 

12. திரு.தங்கவேல் நடராஜன், பரமத்தி வசந்தபுரம், நாமக்கல்.

13.திரு.R.ரங்கசாமி,  6/149 மாலிப்பட்டி.

14.திரு.பழனிசாமி, பரமத்தி வேலூர் வட்டம்.

15.திரு.R.ராஜேந்திரன், 696/F5.அன்புநகர், சேலம்ரோடு, நாமக்கல்.

16.திருமதி.தனம் W/O ரங்கசாமி அப்பநாயக்கன்பட்டி.

17.திருவாளர்கள் என். செல்வராஜ்.என்.சின்னதுரை, தொட்டியபட்டி, ராசிபுரம்.

18. திருஎம் நாகப்பன், போடிநாயக்கன்பட்டி, ராசிபுரம்.

19.திரு.என்.ரகுபதி, S/O நாகராஜன், அப்பநாயக்கன்பட்டி, ராசிபுரம்.

20. திரு.எஸ்.நாகராஜன், ஏரிக்காடு, கெண்டி ரங்கமநாயக்கனூர்.

21. திரு.மணி@முத்துசாமி, பெரியூர்.ராசிபுரம்.

22. திரு.அப்பாவு, ஊராட்சி மன்றத் தலைவர்.

23. திரு.தாமரைச்செல்வன், ஊ.ம.தலைவர், பொம்மக்கல்பாளையம்.

24.திரு.பழனிவேல், வங்கி மேலாளர் தருமபுரி. 

சமுதாய வளர்ச்சிக்கு உதவிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ள வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், இன்னும் தேவைப்படும் நிதியினை சமுதாய உறவுகள் நம்பிக்கையோடு அளித்து சமுதாய வளர்ச்சியில் எல்லோரும் பங்கேற்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved