🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக மாணவரணி தலைவருடன் திடீர் சந்திப்பு!

தமிழ்தேசிய அரசியலில் அறிமுகமாகி தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் அழுத்தமான வாதங்களை முன்வைத்தின் மூலம் சித்தாந்த ரீதியாக அரசியலை அணுகும் அறிவுஜீவிகளால் கவனிக்கப்பட்டவர் வழக்கறிஞர் இராஜீவ்காந்தி. திராவிடமும் தமிழ்தேசியமும் வெவ்வேறானவை அல்ல என்ற புரிதலின் அடிப்படையில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கும் முன்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தை தொடர்பவர். தமிழகத்தில் அரசியலைமைப்புச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற இளம் வழக்கறிஞர்களில் முதன்மையானவராக அறியப்படும் இராஜீவ்காந்தி தற்போது திமுக மாணவரணி தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை சென்னை அண்ணாசாலையிலுள்ள அலுவலகம் ஒன்றில் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் இராஜீவ்காந்தி அவர்களை சந்தித்து பேசினார். திட்டமிடப்படாத இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் வாழும் இராஜகம்பளத்தார் சமுதாயத்தின் நிலை குறித்து அக்கறையோடு கேட்டறிந்தார். அப்பொழுது 20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை இருந்தும் அரசியலில் குறிப்பாக திமுக வில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதில்லை இல்லை என்ற எதார்த்தநிலை அவரிடம் எடுத்துரைக்கப்பட்டது.

அப்போது வாய்ப்பற்ற சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும், சமூகநீதியை நிலைநாட்டுவதிலும் தமிழக முதல்வரும், கழகமும் மிகுந்த கவனத்தோடு இருப்பதாகவும், அதற்கான சூழல் கனிந்து வருவதாகவும், நிச்சயம் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் குரல் தலைமையின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என வாக்குறிதியளித்தார்

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved