🔴 LIVE | முப்பெரும் விழா 2023


மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக கிருஷ்ணகுமார் நியமனம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தில் அமைப்புத்தேர்தல்கள் நடந்துவந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தலும் நடந்து முடிந்து அக்கட்சியின் தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் மற்ற துணை அமைப்புகளான சுற்றுச்சூழல் அணி, மாணவரனி போன்றவற்றிற்கான நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

திமுக வில் பிரதான அமைப்பு தவிர மிகமுக்கிய அணியாக பார்க்கப்படுவது அக்கட்சியின் இளைஞரணி. தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்டு அவர் தலைமையில் இயங்கிவந்த இளைஞரணிக்கு தற்போது தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து வருகிறார். அவரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குவதால் இளைஞரணியில் இடம்பிடிப்பதற்கு அக்கட்சியில் கடும் போட்டி நிலவுவது வாடிக்கை.

இந்நிலையில் மாநிலம் முழுவதுமிருந்து இளைஞரணி நிர்வாகிகள் பொறுப்புக்கு 4158 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 609 தேர்வு செய்யப்பட்டு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் ஒப்புதலோடு வெளியாகியுள்ள இளைஞரணி பொறுப்பாளர் பட்டியலில் விருதுநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக விருதுநகர் கிருஷ்ணகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

20 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வசிக்கும் கம்பளத்தாரில் திமுகவில் மாவட்ட அளவிலான பொறுப்புகளை பெருமளவிற்கு தங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டுள்ளவர்கள் ஒருசிலர் மட்டுமே இருப்பது, அரசியல் கட்சியில் பயணிப்பவர்கள் அந்ததக்கட்சிக்கு ஏற்றாற்போல் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்பதை காட்டுகிறது. அரசியலில் ஆர்வமுள்ளவர்கள் எல்லா கட்சிகளையும் ஒரே மட்டத்தில் அணுக முடியாது என்பதை உணர்ந்து, அதற்கேற்ற அடிப்படைத் தகுதிகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். அந்த வகையில் கடும் போட்டி நிலவும் திமுக வில், தலைமையின் நேரடி தொடர்பிலுள்ள இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பதவியை தக்கவைத்துக்கொண்டுள்ள கிருஷ்ணகுமார் அவர்களுக்கு வாழ்த்துகள்.

கிருஷ்ணகுமார் அவர்களை இப்பதவிக்கு பரிந்துரை செய்த மாவட்டச் செயலாளரும் நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கிய இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இராஜகம்பளத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved