🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒன்னேகால் கோடி மதிப்பீட்டில் அறக்கட்டளை அலுவலகம்!

தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை சார்பாக நன்றியறிவிப்புக்கூட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது. இதுகுறித்து அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

நாமக்கல் தொட்டியநாயக்கர் சமுதாய அறக்கட்டளை கூட்டம் தலைவர் மு.பழனிச்சாமி அவர்கள் தலைமையில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அறக்கட்டளைக்கு சொந்தமாக நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்வதற்காக குறுகிய காலத்தில் நிதியுதவி அளித்த நல் உள்ளங்கொண்ட உறவுகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் கருத்துப்படி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் விரைந்து கட்டிடம் கட்டி சமுதாயத்திற்கு அர்ப்பணிக்க  தீர்மானிக்கப்பட்டது. இப்பணியை மேற்கொள்ள விரைவில் குழு ஒன்று அமைத்திட முடிவு செய்யப்பட்டது.

மேலும் புதிதாக வாங்கிய நிலத்தில் தரைதளத்தோடு இரண்டுமாடி கட்டிடம் கட்டுவதற்கான உத்தேச மதிப்பீடாக 1.20 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு, நிதிதிரட்டும் பணியினை முடுக்கிவிட முடிவுசெய்யப்பட்டது.


இதனையடுத்து கட்டுமானப்பணிக்காக முதல் நன்கொடையாக ரூ.100000/- (ஓரு லட்சம் மட்டும்) வழங்கி தனது ஆதரவினை வெளிப்படுத்தினார் மூத்தவழக்கறிஞர் திரு.பழனிச்சாமி அவர்கள். இதனையடுத்து அவருக்கு நிர்வாகிகள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் அறக்கட்டளை செயலாளர் துரைசாமி, பொருளாளர் சின்னுசாமி, அமைப்புச் செயலாளர் சரவணன், தலைமையிடச் செயலாளர் மணி Ex.V.A.O, அறக்கட்டளை உறுப்பினர்கள் தண்டு வாடம்பட்டி தங்கவேல், வசந்தபுரம் மேலப்பட்டி நடராஜன் , மேட்டுக்கடை போத்தன் என்கின்ற ரங்கசாமி, பாலாஜி மெடிக்கல் முத்துசாமி, புதுச்சத்திரம் மனோகர், N.புதுப்பட்டி மேலப்பட்டி தங்கராசு, தூசூர் பாலப்பட்டி சின்னுசாமி, சாமி நகர் தங்கவேல்,  பொம்மம்பட்டி ரங்கசாமி, தலுகை  Er.அண்ணாதுரை  ஆகியோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கால்நடை மருத்துவர் ராமநாயக்கன்பட்டி ராமசாமி கலந்து கொண்டார்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved