🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோவிட்-19. “விடையை சொல்லுங்க – பரிசை அள்ளுங்க” – இரண்டாம் சுற்று

வீரசக்கதேவி துணை:-

==========================

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்கமிட்டியினர் நடத்திய வரலாற்று கேள்விகளுக்கான முதல் சுற்றில் பலரும் பதில் அனுப்பியுள்ளனர். அதில் வெற்றிபெற்ற நபர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவர்.

இரண்டாவது சுற்று இன்று முதல் ஆரம்பமாகிறது.

கோவிட்19க்காக விடுமுறையில் இருக்கும் நம் சொந்தங்கள் வரலாற்றை அறிந்தகொள்வதற்காக “பாஞ்சை சக்கதேவி ஆலய கமிட்டி” போட்டி ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளது.

மூன்று கட்டங்களாக நடைபெறும் இப்போட்டியில், மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.

முதற்கட்டமாக தகுதிச்சுற்றில் 33கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் தலா-3 மார்க்

இரண்டாம் சுற்றில் 33 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் தலா-3 மார்க்

இறுதிசுற்று 34 கேள்விகள். மதிப்பெண் தலா-3 மார்க்.

பரிசு விபரம்.

முதல் சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய்.2000.00,

இரண்டாம் சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய்.3000.00

இறுதி சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய் 5000.00

இதுதவிர, போட்டியில் பங்குபெறும் 40 நபர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டுநாள் கொடைக்கானல் சுற்றுலாவிற்கு இலவசமாக அழைத்துச்செல்லப்படுவர். தங்குமிடம்-உணவு இலவசமாக வழங்கப்படும். இரண்டாம்நாள் வரலாற்று கருத்தரங்கம் நடைபெறும்.

நடைபெறும் நாள் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு சித்திரை விழாவின்பொழுது தெரிவிக்கப்படும்.

பரிசு வழங்குமிடம் இடம்-நாள்: பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவிகோவிலில் சித்திரை திருவிழா மேடை. 08.05.2020.

கோவில்கமிட்டியின் முடிவே இறுதியானது

################################

இரண்டாம் சுற்றுக்கான கேள்விகள் பின்வருமாறு:−

1, கம்பிள பேரரசை நிறுவியவர் யார்?

2, கம்பிள பேரரசின் தலைநகர் எது?

3, கம்பிள பேரரசு ஆரம்பிக்கப்பட்ட வருடம் என்ன?

4, கம்பிள பேரரசின் கடைசி மன்னர் யார்?

5, கம்பிள பேரரசு முடிவுற்ற ஆண்டு எது?

6, விஜயநகர பேரரசை நிறுவியவர் யார்?

மேலே உள்ள கேள்விக்கான பதில்கள் “தொட்டிய நாயக்கர் தகவல் களஞ்சியம்” என்ற இணையதளத்தில் உள்ளது. ( தொட்டிய நாயக்கர் தகவல் களஞ்சியத்தில் தேடுவது எப்படி? கூகில் குரோமில் www.thottianaicker.com என்று டைப் செய்யவும், மொபைலில் பார்ப்பவர்கள் TN என்ற லோகோ விற்கு எதிர்புறம் (=) நான்கு கோடுகள் இருக்கும், அதை தேர்வு செய்து உள்ளே சென்றால், கலை என்ற பிரிவில் “கலைகள்,இலக்கியம்,கட்டுரைகள்” என மூன்று பகுதிகள் இருக்கும், அதில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை வாசித்து பதிலை பெறுங்கள்).

7, விஜயநகர பேரரசு ஆரம்பித்தது எந்த ஆண்டு?

8, மூஸ்லீம்கள் படையெடுப்பின்போது, விஜயநகர பேரரசின் உதவியை நாடிய பாண்டிய மன்னரின் பெயர் என்ன?

9, விஜயநகர பேரரசின் இளவரசர் குமாரகம்பணர் தெற்கே ஒரு நதிக்கரைவரை வந்தார், அந்த நதியின் பெயர் என்ன?

10, குமாரகம்பணரின் மனைவியின் பெயர் என்ன?

11, குமாரகம்பணரின் மனைவி சமஸ்கிருத மொழியில் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன?

12, மதுரை நாயக்க பேரரசின் முதல் மன்னர் யார்?

13, மதுரை நாயக்கர் பேரரசை விஜயநகரிலிருந்து பிரித்து சுகந்திர நாடாக பிரகடனம் செய்தவர் யார்?

14, காவிரியின் குறுக்கே, மைசூரில் கட்டிய அணையை உடைத்து தென்நாட்டிற்கு தண்ணீர் கிடைக்க மதுரையிலிருந்து படை அனுப்பியவர்

யார்?

15, திருமலைநாயக்கரின் நினைவுநாள் எது?

16, மதுரை நாயக்க பேரரசின் தலைநகர் மதுரை என்பதை நாம் அறிவோம். ஆனால் சிலசமயம் தலைநகராக வேறொரு நகரம் இருந்துள்ளது, அதன் பெயர் என்ன?

17, மதுரை நாயக்க பேரரசின் கடைசி ராணி யார்?

18, மதுரை நாயக்க பேரரசை சூழ்ச்சிசெய்து வீழ்த்தியவர் யார்?

19, திருமலைநாயக்கர் காலத்தில் வாழ்ந்த கட்டபொம்மன்களின் பெயர் என்ன?

20, கண்டி பேரரசின் கடைசி மன்னர் கண்ணுசாமி நாயக்கர் நினைவுதினம் எப்போது?

21, பாஞ்சாலங்குறிச்சிக்கு ஆதரவாக இருந்ததால், வெள்ளையரால் கொல்லப்பட்ட, காடல்குடி பாளையக்காரா்கள் இருவரின் பெயர் என்ன?

22, காடல்குடி பாளையக்காரா்கள் தண்டிக்கப்பட்ட ஆண்டுகள் யாவை?

23, தமிழக அரசால் நினைவுஸ்துாபி அமைத்து போற்றப்படும் நல்லப்பசாமி அவர்கள் எந்த பாளையத்தை சேர்ந்தவர்?

24, நல்லப்பசாமி அவர்களின் திருஉருவப்படத்தை “இயல்−இசை−நாடக மன்றத்தில் திறந்து வைத்து

மரியாதை செலுத்திய முதல்வர் யார்?

25, நல்லப்பசாமி அவர்களின் உருவப்படத்தை தஞ்சை உலகத் தமிழ் மாநாட்டில் திறந்து வைத்து மரியாதை செய்த முதல்வர் யார்?

26, நல்லப்பசாமி அவர்களின் உருவப் படத்தை சென்னை கவர்னர் மாளிகையில் திறந்து வைத்து மரியாதை செய்த கவர்னர் யார்?

27, “…நல்லப்பசாமி என்றும் நலின் குரல் பாண்டியனே− இனி உன்னை வெல்லப்பன் யாரப்பா

மயிலும் ஈடில்லை உன் வடிவழகில்

குயிலும் ஈடில்லை உன் குரல் இசையில்

பழம் பெரும் கவிதைகள் நான் பாடினாலும்

குரல்வளம் கொடுத்தாள் உனக்கு கலைவாணியே…” என்று பாடிய தேசியக்கவி யார்?

28, கம்பன் இல்லா இடத்தை நிரப்பிய “கவிராச பண்டிதர்” செக வீரபாண்டியனாரின் சொந்த ஊர் எது?

29, செக வீரபாண்டியனாரின் முதல் நூல் எது?

30, செக வீரபாண்டியளாரின் வீரகாவியம் எத்தனை வெண்பாக்களை கொண்டது?

31, செக வீரபாண்டியனாரின் தர்மதீபிகையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த வெளிநாட்டவரின் பெயர் என்ன?

32, செக வீரபாண்டியனாரின் நூலை நாட்டுடமை ஆக்கிய முதல்வரின் பெயர் என்ன?

33, செக வீரபாண்டியனாரின் நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள் எவை?

குறிப்பு:−

இரண்டாம் சுற்றிற்கான பதில் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 09−04−2020. விடைகளை வாட்ஸ் அப்பில் அணுப்ப வேண்டிய மொபைல் எண்:7010014851

இப்படிக்கு

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்கமிட்டி

பாஞ்சாலங்குறிச்சி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved