🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கோவிட்-19 “விடையைச் சொல்லுங்க-பரிசை அள்ளுங்க”

வீரசக்கதேவி துணை:-

=====================

கோவிட்19க்காக விடுமுறையில் இருக்கும் நம் சொந்தங்கள் வரலாற்றை அறிந்தகொள்வதற்காக “பாஞ்சை சக்கதேவி ஆலய கமிட்டி” போட்டி ஒன்றை ஏற்பாடுசெய்துள்ளது.

மூன்று கட்டங்களாக நடைபெறும் இப்போட்டியில்,  மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.

முதற்கட்டமாக தகுதிச்சுற்றில் 33கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் தலா-3 மார்க்

இரண்டாம் சுற்றில் 33 கேள்விகள் கேட்கப்படும். மதிப்பெண் தலா-3 மார்க்

இறுதிசுற்று 34 கேள்விகள். மதிப்பெண் தலா-3 மார்க்.

பரிசு விபரம்.

முதல் சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய்.2000.00,

இரண்டாம் சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய்.3000.00

இறுதி சுற்றில் வெற்றி பெறுபவருக்கு ரூபாய் 5000.00

இதுதவிர, போட்டியில் பங்குபெறும் 40 நபர்கள் மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டுநாள் கொடைக்கானல் சுற்றுலாவிற்கு இலவசமாக அழைத்துச்செல்லப்படுவர். தங்குமிடம்-உணவு இலவசமாக வழங்கப்படும். இரண்டாம்நாள் வரலாற்று கருத்தரங்கம் நடைபெறும்.

நடைபெறும் நாள் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு சித்திரை விழாவின்பொழுது தெரிவிக்கப்படும்.

பரிசு வழங்குமிடம் இடம்-நாள்: பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவிகோவிலில் சித்திரை திருவிழா மேடை. 08.05.2020.

கோவில்கமிட்டியின் முடிவே இறுதியானது

################################

முதல் சுற்றுக்கான கேள்விகள் பின்வருமாறு:−

1, இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடி யார்?

2, வீரபாண்டிய கட்டபொம்மனின் தந்தை பெயர் என்ன?

3, வீரபாண்டிய கட்டபொம்மனின் தாயார் பெயர் என்ன?

4, வீரபாண்டிய கட்டபொம்மனின் உடன் பிறந்தவர்கள் பெயர் என்ன?

5, வீரபாண்டிய கட்டபொம்மனின் முதல் போர்களம் எது?

6, வெள்ளையர்கள் நேரடி நிர்வாகத்திற்கு வந்த ஆண்டு என்ன?

7, கட்டபொம்மன் அறியணை ஏறியது எந்த ஆண்டு?

8, வீரபாண்டிய கட்டபொம்மனின் மந்திரியின் பெயர் என்ன?

9, வீரபாண்டிய கட்டபொம்மனின் மனைவியின் பெயர் என்ன?

10, வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாள் என்ன?

11, வீரபாண்டிய கட்டபொம்மன் எதற்காக வெள்ளையரை எதிர்த்தார்?

12, வீரபாண்டிய கட்டபொம்மனை காட்டி கொடுத்தது யார்?

13, வீரபாண்டிய கட்டபொம்மனை பிடித்து கொடுத்ததது யார்?

14, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தூக்கு தண்டணை விதித்தது யார்?

15, வீரபாண்டிய கட்டபொம்மனுக்காக உயிர் துறந்த பாளையக்காரர்கள் யார், யார்?

16, வீரபாண்டிய கட்டபொம்மனால் கொல்லப்பட்ட வெள்ளையர்கள் பெயர் என்ன?

17, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அடைக்கலம் கொடுத்த பாளையம் எது?

18, அடைக்கலம் தந்தவரின் பெயர் என்ன?

19, வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு உதவிய பாளையங்கள் எவை?

20, வீரபாண்டிய கட்டபொம்மனின் கொள்கைகள் என்ன?

21, வீரபாண்டிய கட்டபொம்மன் “வானம் பொழிகிறது… ” என்று யாரிடம் பேசினார்?

22, மேற்கூறிய சம்பவம் நடந்த இடம் எங்குள்ளது?

23, வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்டது எந்த தேதி?

24, வீரபாண்டிய கட்டபொம்மனை துாக்கிலிட்ட ஆண்டு?

25, துாக்கிலிட்ட இடத்தின் பெயர்?

26, தூக்கிலிட்ட இடத்தில் நினைவு ஸ்துாபி நிறுவியது யார்?

27, அந்த இடத்தில் நினைவு மண்டபம் நிறுவியது யார்?

28, பாஞ்சாலஞ்குறிச்சி நினைவு கோட்டையை நிறுவியது யார்?

29, முதல் தொல்லியல் ஆய்வு செய்தவர் யார்?

30, வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் டைரக்டர் யார்?

31, வசனகர்தா யார்?

32, தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் என்ன?

33, அப்படம் வெளிவந்த ஆண்டு?

குறிப்பு:−

அனைவரும் கலந்து கொள்ளலாம்

பதில்களை அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண்: 7010014851

கடைசி தேதி: 03-04-2020

இப்படிக்கு

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயக்கமிட்டி

பாஞ்சாலங்குறிச்சி.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved