🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் நமக்கு என்னமோ நாமம் தான்!

ஒன்றிய அரசின் கீழ் உள்ள 45 பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பதவிகளில் அளித்துள்ள இடஒதுக்கீடு விவரம் வெளியாகியுள்ளது. இதில் வெளியாகியுள்ள தகவல் மூலம் நாட்டில் பெரும்பான்மையாக உள்ள ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்) கடுமையாக சுரண்டப்பட்டு வருவதை வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. 

இப்புள்ளி விவரத்தின்படி பேராசிரியர் பதவிகளில் பட்டியல் வகுப்பினர்களுக்கு (SC) 15 சதவீதம் வழங்கப்பட்டிருக்க வேண்டியதற்கு பதிலாக 7 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. 

பழங்குடி வகுப்பினருக்கு (ST) 7.5 சதவீதம் வழங்கப்பட்டிருக்க வேண்டியதற்கு பதிலாக வெறும் 2 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

மிக உட்சபட்ச கொடுமையாக, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான (BC+MBC=OBC) க்களுக்கு 27 சதவீதம் வழங்கப்பட்டிருக்க வேண்டியதற்கு பதிலாக 4.5 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

இதேபோல் இணைப்பேராசிரியர் பதவிகளில்  பட்டியல் வகுப்பினர்களுக்கு (SC) 15 சதவீதம் வழங்கப்பட்டிருக்க வேண்டியதற்கு பதிலாக 8 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடி வகுப்பினருக்கு (ST) 7.5 சதவீதம் வழங்கப்பட்டிருக்க வேண்டியதற்கு பதிலாக 2.5 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான (BC+MBC=OBC) க்களுக்கு 27 சதவீதம் வழங்கப்பட்டிருக்க வேண்டியதற்கு பதிலாக 6.5 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

இதேபோல் உதவிப்பேராசிரியர் பணியிடங்களில்  பட்டியல் வகுப்பினர்களுக்கு (SC) 15 சதவீதம் வழங்கப்பட்டிருக்க வேண்டியதற்கு பதிலாக 12 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடி வகுப்பினருக்கு (ST) 7.5 சதவீதம் வழங்கப்பட்டிருக்க வேண்டியதற்கு பதிலாக 6 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரான (BC+MBC=OBC) க்களுக்கு 27 சதவீதம் வழங்கப்பட்டிருக்க வேண்டியதற்கு பதிலாக 18.5 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. 

மத்தியில் எந்தக்கட்சி ஆட்சியில் இருந்தாலும், பிரதமராக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நரேந்திர மோடி, குடியரசு தலைவராக பழங்குடி வகுப்பைச் சேர்ந்த திரௌபதி முர்மு  போன்றோர் இருந்தாலும் உயர்சாதி ஆதிக்கத்திற்கு அடிபணிந்துதான் செயல்பட வேண்டியுள்ளது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பிரயோசனம் ஏதுமில்லை என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.

இதற்கிடையே இடஒதுக்கீட்டால் தகுதி, தரம் குறையும் என்று பொதுப்புத்தியில் ஏற்றப்பட்டுள்ள தவறான சிந்தனை தவறு என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து தி அமெரிக்கன் ஜெர்னல் பார் பொலிட்டிக்கல் சயின்ஸ் என்ற இதழ் தரவுகளுடன் கட்டுரை வெளியிட்டுள்ளது. இது கூகுளில் தேடினால் கிடைக்கிறது. 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved