🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தடையில்லை : உயர்நீதிமன்றம் அனுமதி

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தடையில்லை : உயர்நீதிமன்றம் அனுமதி

பீஹாரில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான தடையை பாட்னா உயர்நீதிமன்றம் விலக்கிக்கொண்டது.

பீஹாரில் சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு அம்மாநில அரசு முடிவு செய்தது. முதல் கட்டமாக ஜன.,7 முதல் 21 வரை கணக்கெடுப்பு முடிந்த நிலையில், இரண்டாவது கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் நடத்த அம்மாநில அரசு தீவிரம் காட்டியது. இதனை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த சில மாதங்களுக்கு முன் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்த போது, இடைக்கால தடையை நீக்கிய உயர்நீதிமன்றம், சாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த அனுமதி வழங்கியது.

இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், அம்மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்த தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி எனக்கூறியுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved