🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அதிகரிக்கும் கண்ணாடி விரியன் பாம்புகள் - பலியாகும் உயிரினங்கள்.

பாம்பு விவசாயிகளின் தோழன் என்பது நூறு சதவீதம் உண்மை. இது எப்படி சாத்தியம் என்று பார்த்தோமென்றால் இரவு நேர வேட்டை விலங்கான எலி தொல்லையை பாம்பு கட்டுப்படுத்துகின்றது.

வயக்காட்டு வெள்ளை எலி, வயல் வரப்பு வயல் சார்ந்த மேட்டு நிலப்பகுதியில்  வாழ்விடம் வலை அமைத்து வாழ்கிறது.

வயக்காட்டு வெள்ள எலி அக்டோபர் (ஐப்பசி) மாதங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. நவம்பர் மாதத்தில் நெற்பயிரில் பருவம் கொள்ளும் பால் பருவ தட்டையை முளைப்பயிரிலேயே கடித்துத் தின்று நாசம் செய்கின்றது.

இந்தப் பால் தட்டை எலியின் உடலிலுக்கு அதிக புரதசத்தைக்கொடுக்கிறது. இதனால் எலிக்கு அதிக அளவில் பால் சுரந்து தனது குட்டிகளை மிக ஆரோக்கியமாக வளர்த்து விட ஏதுவாகின்றது.

தொடர்ந்து நெல்மணிகளை கடித்து நாசம் செய்யும் எலிகள், இரண்டு மூன்று மாதத்தில் குட்டிகள் வளர்ந்து கூட்டு குடும்பமாகி விடுகின்றன.

இப்படி பெரிய கூட்டு குடும்பமான எலி குடும்பம், கோடை,கால உணவிற்காக பெரிய அளவில் பூமிக்கு அடியில் வலைதளம் அமைத்து முதிர்ந்த நெல்மணிகளை கடித்து (கிள்ளி) எடுத்து சேமிக்கின்றன.

ஒரு குடும்பம் குறைந்தபட்சம் 100 - கிலோ கிராம் நெல் வரை சேமிக்கும் திறன் கொண்டதாகும். இப்படி பல எலி குடும்பங்கள் நெல்மணிகளை கடித்து நாசம் செய்வதால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்தனர், அடைகின்றனர்.

இந்த எலிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு இயற்கை கொடுத்த கொடை தான் பாம்பு ஆகும். தமிழகத்தில் கொடிய விஷமுள்ள பாம்புகளும் விஷமற்ற பாம்புகளும் எலியை வேட்டையாடுகின்றன.

விஷமுள்ள நல்ல பாம்பு, புடையன் பாம்புகள்  நாற்று வயலிலும், சேற்றிலும் வேகமாக செல்லும் ஆற்றல் கிடையாது. ஆகையால் இவை பெரும்பாலும் மேட்டுப்பகுதியில் உணவை வேட்டையாடுகின்றன. விஷமுள்ள பாம்புக்கும் விவசாயிக்கும் உள்ள இடைவெளி தூரம் அதிகமாகின்றது.

எலிகளை வேட்டையாடுவதில் விஷமற்ற சாரைப்பாம்பு முன்னிலை வருகின்றது. சாரைப்பாம்பு தனது உணவை பதுங்கி தாக்காது. எலியை கண்டால் விரட்டி பிடிக்கும் வேகம் கொண்டது நெருக்கமான நெல் பயிருக்குள்ளும் மற்றும் சேற்றிலும் அசாரதனமாக வளைந்து நெளிந்து அதிவேகமாக எலியை விரட்டிப் பிடிக்கும் ஆற்றல் கொண்டதாகும்.

சாரைப்பாம்பு விஷமற்றது. விவசாயிகளுக்கம் மற்றும் கால்நடைகளுக்கும் உயிர் சேதாரம் 100% ஏற்படுத்தாது. இந்த சாரை பாம்பு தான் விவசாயிகளின் உண்மையான உற்ற தோழனாகும்.

கடந்த 7 - வருடத்திற்குள் தமிழகத்தில் கண்ணாடி விரியன் பாம்பு அதிக அளவில் காணப்படுகின்றது. விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் அதிக அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்துகின்றது.

இந்த கண்ணாடி விரியன் பாம்பால் விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் உயிர் சேதாரம் தவிர இதனால் பலன் 1% சதவீதம் கூட கிடையாது.

பொதுவாக கண்ணாடி விரியன் வெப்ப மண்டல பிராணி ஆகும். தனது உணவை பதுங்கி காத்திருந்து சுமார் 6 முதல் 7  அடி வரை பதுங்கி பாய்ந்து  தாக்கி உணவாக உட்கொள்ளும்.

பாலைவனம் மற்றும் மலையும் மலை சார்ந்த பாறை பகுதிகளில் வாழக்கூடியது. இயற்கையாகவே இந்த பாம்பு அங்கு வசிக்கும் பல்லி, பூரான், தேள் போன்ற விஷமுள்ள உயிரினங்களை உணவாக உட்கொள்கிறது.

 இந்த பாம்பு மற்ற ( நல்ல பாம்பு ) விஷமுள்ள பாம்புகளை விட, விஷம் அதிகம் உள்ள, கொடிய விஷமுள்ள பாம்பு இனத்தைச் சேர்ந்ததாகும். இந்த பாம்பு கடித்தால் மனிதன் மற்றும் கால்நடைகள் மரணம் ஏற்படுவது நிச்சயம்.

வெப்பமண்டல மலைப்பகுதியில் வாழ்ந்த கண்ணாடி விரியன் பாம்பு எப்படி காவேரி , தாமிரபரணி, வைகை போன்ற கடைமடை வயல் பகுதிகளில் அதிக அளவில் காணப்படுகிறது என்றால்...?

தென்னக ரயில்வேயின் மீட்டர்கேஜ் பாதை அகற்றப்பட்டு (பிராட்வே) அகல ரயில் பாதை போடப்பட்ட போது...!

தமிழகத்தில் உள்ள மலை குன்றுகள் விலை உயர்ந்த கிரானைட் போன்றது என்பதால் அகல ரயில் பாதை செப்பனிடும் ரயில்வே ஒப்பந்தக்காரர்கள் ஆந்திரா போன்ற கிழக்கு தொடர்ச்சி மலை  ஒப்பந்தக்காரர்களிடம் ஜல்லியை விலை கொடுத்து வாங்கினர்.

அப்படி வாங்கப்பட்ட ஜல்லிகளை இயந்திரங்கள் (பொக்லைன்) உதவியால் மொத்தமாக அள்ளி லாரியில் (டிப்பரில் ) போடும்பொழுது அந்த பாறை பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்த கண்ணாடி விரியன் பாம்புகளும் ஜல்லிகளில் கலந்து தமிழகத்தில் காவேரி, வைகை, தாமிரபரணி போன்ற கடைமடை வயல் பகுதிகளை ஆக்கிரமித்து விட்டன.

இயற்கையாக வறண்ட நிலப் பகுதியில் உணவுக்கு திண்டாடி தனது இனப்பெருக்கத்தை இயற்கையாகவே கட்டுப்பாட்டில் வைத்திருந்த  இந்த கண்ணாடியை விரியன் பாம்புகளுக்கு தமிழக கடைமடை பகுதியில் புகுந்ததால்  அடித்தது லாட்டரி என்று சொல்லலாம்...!

தமிழகத்தின் பூர்வீக வாழ்விட ஊர்வன பிராணிகளான சாரைப்பாம்பு, நல்ல பாம்பு மற்ற பாம்புகளின் குட்டிகளை தின்று ஏப்பம் விட்டு தனது சந்ததியை பெருக்கி விட்டன இந்த கண்ணாடி விரியன் பாம்புகள். இதன் காரணமாக தற்சமயம் கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களிலும் பரவத் தொடங்கி விட்டன.

இந்த கண்ணாடிவிரியன் பாம்புகள் தாக்குதலுக்கு உள்ளாகி அழியும் விளிம்பில் சென்ற சாரைப்பாம்பு, நல்ல பாம்பு மற்ற நீர்ப்பாம்புகள் மிகக் குறைந்து அழிந்த காரணத்தால் வயல்வெளிகளில் எலிகளின் தொல்லை பெருகிவிட்டது. இதன் காரணமாக விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைகின்றார்கள்.

இந்த கண்ணாடி விரியன் பாம்பு கடித்து காவிரி டெல்டா பகுதியில் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ஒருவராவது இறந்து போகிறார்கள். மேலும் பெருமளவில் கால்நடைகள் கடிபட்டு இறந்து போகின்றன என்பது மிகுந்த துயரமான செய்தியாகும்.

ஏனென்றால் மர நிழல் மற்றும் வைக்கோல் மற்றும்  இலை,தழை சருகுகளில் இந்த பாம்பு பதுங்கி இருந்தால் கண்ணுக்கு புலப்படாது.

கடன் பட்டு பல இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு மனித குலத்திற்கு உணவளிக்கும் விவசாயிகள், தமிழகத்தின் புதிய வரவான இயற்கைக்கு முரண்பாடான இடமாற்றத்தால் இந்த கண்ணாடி விரியன் பாம்பால் கடிபட்டு இறந்து போகிறார்கள்.

அரசு இந்த விஷயத்தில் தனி கவனம் செலுத்தி இந்த பாம்புகளை அழிக்க வேண்டும். அல்லது இந்த பாம்புகளை பிடித்து அதன் இயற்கையான வாழ்விடத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது சூழலியளாளர்களின் கோரிக்கையாகும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved