🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பொதுமக்கள் சேவையில் ஊராட்சி மன்றத் தலைவர்

கரூர் மாவட்டம், ஈசநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கடைவீதி பகுதியில், பயன்பாடற்ற நிலையிலுள்ள பொதுக் கழிப்பிடத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டுவரும் நோக்கில், ஊரட்சி மன்றத் தலைவர் திரு.M.N.ராமசாமி அவர்களின் சீறிய முயற்சியால், நவீன “உயிரி தொழில் நுட்ப முறையில் கழிவு நீர் தொட்டி”  (மேக் இந்திய நிறுவனத்தின் – பயோ டைஜிஸ்டர் முறையிலான செப்டிக் டேங்க்) அமைக்கப்பட்டுள்து.  இந்த கழிவு நீர் தொட்டியில் உள்ள பாக்டீரியாக்கள் மனித கழிவுகளை உண்டு சுத்தீகரித்து நன்னீராக வெளியேற்றுகிறது. 


இந்த மறுசுழற்சி முறையால் பூமியின் நீர் மட்டம் உயர்வதோடு, தண்ணீர் வீணாவதும்,  மாசுபடுவதும் முற்றிலும் தவிர்க்கப்படும். மறுசுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட்ட  நீரை செடி,கொடிகள்,மரம் வளர்ப்பு, பூங்காக்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்துவதின் மூலம் சுற்றுப்புற சூழலை மேம்படுத்த முடியும்.  கரூர் மாவட்டதில் முதல் முறையாக ஈசநத்தம் ஊராட்சியில் அறிமுகம் செய்யபட்டுள்ளது  என்பது குறிபிடத்தக்கது. பொதுவாழ்வில் செம்மையாக செயல்பட்டு பெருமை சேர்க்கும் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M.N.ராமசாமி அவர்களுக்கு வாழ்த்துகள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved