🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமனம் - பணிசிறக்க வாழ்த்துகள்.

திமுக வின் உட்கட்சித் தேர்தல்கள் கிளைக்கழகம் தொடங்கி தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்வு வரை முழுமையாக நடைபெற்று பொதுக்குழுவும் கூடி முடிந்துள்ளது. இதன் நீட்சியாக அக்கட்சியிலுள்ள பல்வேறு துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகள் பட்டியல் தலைமையின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டு வருகின்றன.

2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க ஆளும்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம்  முழுவீச்சில் தயாராகி வருவம் நிலையில் துணை அமைப்புகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்படுவதில் அக்கட்சி முனைப்புக்காட்டி வருகிறது. இதேவேகத்தில் மற்றொருபுறம் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிக் கூட்டத்தில் மண்டல வாரியாக நடைபெறத் தொடங்கியுள்ளது. இதில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று உரையாற்றி கட்சியினரை உற்சாகமூட்டி வருகிறார். 

பிரதான அமைப்பில் சொற்ப எண்ணிக்கையிலான ஒன்றிய, வட்ட செயலாளர் அளவிலான பதவிகளை மட்டுமே கம்பளத்தார் சமுதாயம் பெறமுடிந்த நிலையில்,  தற்போது வெளியிடப்பட்டு வரும் துணை அமைப்புகளுக்கான நிர்வாகிகள் பட்டியலில் இராஜகம்பளத்தார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாவட்ட கலை, இலக்கிய அணி, இளைஞரணி, மாணவரணி உள்ளிட்ட அமைப்புகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் கம்பளத்தார்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலில் காங்கேயம் நகர தகவல் தொழில்நுட்ப அணி (சமூக வலைதளம்) யின் ஒருங்கிணைப்பாளராக தா. செந்தில்குமார் M.Com,DCA., நியமிக்கப்பட்டுள்ளார். இவர் காங்கேயம் நகரில் பத்திர எழுத்தாளராக பணியாற்றி வருகிறார். சமூக வலைதளங்களில் முனைப்பாக இயங்கிவரும் தா.செந்தில்குமார் உடுமலைஅருகேயுள்ள ஜல்லிபட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். பணி நிமித்தம் காரணமாக காங்கேயம் நகரில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.

காங்கேயம் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தா.செந்தில்குமார் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம். இந்த வாய்ப்பை வழங்கிய தலைமைக்கழக, மாவட்ட, ஒன்றியக்கழக நிர்வாகிகள் அனைவருக்கும் இராஜகம்பள சமுதாயத்தின் சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.


  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved