🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கொல்லவார் இல்லாமல் இந்தியாவும் இல்லை, இந்து மதமும் இல்லை - ஐதராபாத் மாநாட்டில் பேச்சு!

தெலுங்கானா மாநில சட்டமன்றத்தின் ஆயுட்காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடைகிறது. இந்நிலையில், ஆளும் கட்சியான பாரதிய ராஷ்ட்ரிய சம்தி (BRS) அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில், 115 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியிடுள்ளதையடுத்து, தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கான பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அரசியல் கட்சிகள் யாதவ சமுதாயத்திற்கு உரிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அம்மாநில தலைநகர் ஹைதராபாத்தில் மாபெரும் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு,


தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்கள் இணைந்த ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கொல்லா பிரிவைச் சேர்ந்த எர்ர கொல்லா, பூஜகொல்லா, கர்ண கொல்லா, நல்ல கொல்லா உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட உட்பிரிவுகள் இந்திய விடுதலைக்கு முன்பாக 1937-இல் ஒன்றிணைந்து, அரசியலில் உரிய பிரதிநிதித்துவம் பெரும்வகையில் "யாதவ்" என்ற பொதுப்பெயரில் அழைக்கப்பட்டனர். இது தமிழகத்தில்  கொல்லவார், சில்லவார், தோக்கலவார் உட்பிரிவுகள் இணைந்து தொட்டிய நாயக்கர் என்று அழைக்கப்படுவதற்கு இணையானது. இங்கு கொல்லவார்க்கு "நாயக்கர்" பட்டம் போல், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் "யாதவ்" என்பது. (இங்கு எப்படி உட்பிரிவுகளுக்குள் திருமண பந்தம் இல்லையோ அதேநிலை தான் அங்கும் இருந்து வந்தது. சில பத்தாண்டுகளுக்கு முன் நகர்ப்புறங்களில் தொடங்கிய சம்மந்த முறை கொஞ்சம் கொஞ்சமாக கிராமங்களுக்கும் பரவி வருகிறது). மேய்ச்சல் சமூகமான யாதவ் சமூகம் வடமாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.


அகில இந்திய அளவில் யாதவ மகாசபை என்ற பேனரில் இயங்கிவரும் பொது அமைப்பில், அந்தந்த மாநிலங்களில் உள்ள கொல்லவார்கள் முக்கிய பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இதன் ஒரு கிளை அமைப்பான யாதவ் அறிவிசார் அமைப்பு (Yadav Intellectual  Forum) இன் சார்பாக, வரும் தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில், அனைத்துக்கட்சிகளும் "யாதவ" சமுதாயத்திற்கு போதிய இடங்கள் ஒதுக்கக்கோரி மாபெரும் கூட்டம் ஹைதராபாத்தில்   மாபெரும் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த எம் பிக்கள், எம்.எல்,ஏக்கள், அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் மற்றும் கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


இக்கூட்டத்தில் கலந்துகொள்ள வருமாறு வீ.க.பொ.இராஜம்பள சமுதாய நலச்சங்கக்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ் கலந்துகொண்டார். இதில் அவர் பேசும்போது, கொல்லா (யாதவ்) இல்லாமல் இந்திய வரலாறும் இல்லை, இந்து மதமும் இல்லை. ஆனால் தற்பொழுது எழுத்தப்பட்டுள்ள இந்திய வரலாற்றில் யாதவ்களின் வரலாறு புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே யாதவ்களால் காப்பாற்றப்பட்ட இந்து மதத்தில் யாதவ்கள் செல்வாக்கில்லாமல் உள்ளனர். இது வேதனையான விசயம். எனவே இந்திய வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும். யாதவ் ஆளுமைகள் தலைமையேற்று இந்தியாவை வழிநடத்தப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. அதைநோக்கி இக்கூட்டம் பயணிக்க வேண்டுமென்றும், யாதவ் அறிவுசார் பிரிவின் கோரிக்கைகள் வெற்றியடைய வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பிஆர்எஸ், காங்கிரஸ்,பாஜக உள்ளிட்ட கட்சிகளில் போட்டியிட வாய்ப்புகேட்டுள்ளவர்கள் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். தெலுங்கானாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved