🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இன்று சூப்பர் ப்ளூ மூன் - பார்க்க மறந்திராதீங்க...

வானில் தோன்றும் அரிய நிகழ்வாக சூப்பர் ப்ளூ மூன் திகழ்கிறது. இது இன்று தென்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் முதல் தேதியும், ஆகஸ்ட் 30ம் தேதி என ஆகஸ்ட் மாதத்தில் இரு முறை பெளர்ணமி வருகிறது. இது போன்ற நிகழ்வு 2037ம் ஆண்டு தான் மீண்டும் வரும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நாளில் தெரியும் சூப்பர் மூன் ஸ்டர்ஜன் மூன் என்றும் அழைக்கப்படுகிறது. இது மற்ற சூப்பர் மூன்களை விட மிகப் பெரியதாக இருக்கும், ஏனெனில் அது பூமிக்கு மிக அருகில் இருக்கும். இது தவிர, அதன் நிறத்தை நீங்கள் எளிதாகப் பார்க்க முடியும். இந்த நாளில் பூமியைச் சுற்றியுள்ள சந்திரனின் சுற்றுப்பாதை சுமார் 5 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சூப்பர் மூன் என்றால் என்ன?

பூமி எப்படி சூரியனைச் சுற்றுகிறதோ.. அதேபோலத் தான் நிலவும் நமது பூமியைச் சுற்றி வருகிறது. இது அனைவருக்கும் தெரியும்.. அப்படிச் சுற்றி வரும் போது பூமிக்கு மிக அருகில் நிலவு வரும் நிகழ்வு தான் சூப்பர் மூன் என்று அழைக்கப்படும். நிலவின் சுற்றுப்பாதையில் பூமிக்கு அருகில் இருக்கும் போது இந்த நிகழ்வு நிகழ்கிறது.

எப்போது பார்க்கலாம்?

இன்று இரவு (ஆகஸ்ட் 30) மற்றும் நாளை அதிகாலை (ஆகஸ்ட் 31) நடக்கவுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு அதிகபட்ச ஒளியுடன் ப்ளூ மூன் நிகழ்வு தொடங்கும். இது படிப்படியாக அதிகரித்து நாளை காலை 7.30 மணிக்கு உச்சம் தொடும்.

சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வில் நிலவை முழுமையாக பார்க்க வேண்டுமெனில் இன்று மாலை சூரியன் மறைவிற்கு பின்னர் பார்க்கலாம். அமெரிக்காவில் இரவு 8.37 மணிக்கு சூப்பர் ப்ளூ மூன் நிகழ்வை பார்க்கலாம். லண்டனில் இரவு 8.08 மணிக்கு பார்க்க முடியும். இந்தியாவில் பார்க்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானில் சரியாக பார்க்க முடியாதவர்கள் The Virtual Telescope Project என்ற வெப் டிவியின் மூலம் நேரலையில் பார்க்கலாம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved