🔴 LIVE | முப்பெரும் விழா 2023


தமிழக முதல்வரே.... ஒளிவிளக்குப் போராட்டம் வெற்றி!

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபு (DNC) வகுப்பினர் DNT ஒற்றைச்சான்றிதழ் கோரி கடந்த பத்தாண்டுகளாக போராடி வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது இப்போராட்டம் விஸ்ஸரூபம் எடுத்தது.  2019-இல் DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்குவதாக பேச்சுவார்த்தையில் வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றிய எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கெதிராக DNC/DNT சமூகங்கள் கடுமையான போராட்டம் நடத்தியதின் விளைவாக அதிமுக தோற்கடிக்கப்பட்டது. 


இதற்கிடையே, இப்போராட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த அன்றைய எதிர்க்கட்சி தலைவராக இருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தால் DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்குவதாக வாக்குறுதியளித்தார். 

ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டாண்டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ளது. இதனைக்கண்டித்து, தமிழக முதல்வருக்கு நினைவூட்டும் வகையில் நேற்று 31.08.2023 மாலை தொட்டிய நாயக்கர், வேட்டுவக்கவுண்டர், போயர், கள்ளர், மறவர், முத்தரையர் உள்ளிட்ட DNT சாதியினர் தங்கள் வீடுகளின் முன் பதாகைகளை ஏந்தி மெழுகுவர்த்தி ஏற்றி போர்ட்டத்தில் ஈடுபட்டனர். 


கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தேனி, திண்டுக்கல், விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்ட மக்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமூகம் சார்பாக ஒளிவிளக்கு கூட்டங்கள் நடைபெற்ற கிராமங்கள் விவரத்தை ஒன்றியம் வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.


மோகனூர் ஒன்றியம். 

1.ஊனங்கால் பட்டி- திரு. சதீஷ் 

2. மல்லி மாசம் பட்டி - திரு.அன்னை தங்கவேல்

3.ஜங்கலாபுரம் - திரு. சிட்டி கனகராஜ்

4சிண்ணப்பெத்தாம் பட்டி - திரு. தலைவர் பாலு 

5. N.M.புதூர் - திரு. செல்வராஜ், ராசிபுரம் ஒன்றியம் 

6.போடிநாயக்கன்பட்டி-திருவாளர்கள் துரைசாமி &நாகப்பன்BDO 7.தம்மம்பட்டி - து.தலைவர் சரவணன் 

8.பெரியூர்-திரு.முத்துசாமி @ மணி 

9.விடுதலைக்களம் கட்சி தலைவர்.திரு. கொ.நாகராஜன் ராசிபுரம்- திருச்செங்கோடு ஒன்றியம் 

10.எரப்ப நாயக்கன் பாளையம் -திரு. கதிர்வேல், பரமத்தி ஒன்றியம் 

11.சாலபாளையம்- திரு.சின்னுசாமி த.ஆ.

12.மேலப்பட்டி-திரு.நடராஜன் 

13.தண்டு வாடம்பட்டி -திரு. தங்கவேல் 

14.பரமத்தி -திரு. தாமரைச்செல்வன், நாமக்கல் ஒன்றியம் 

15.அப்பநாயக்கன் பாளையம்-திரு.சுப்பிரமணி 

16. தட்டார பாளையம்-திரு. Surveyor பழனிசாமி

17.மேற்கு பாலப்பட்டி-அகிம்ஷா சொசலிஷ கட்சி தலைவர்.திரு.காந்தியவாதி ரமேஷ் 

18.காரிபாப்பனூர்-திரு.காந்தியவாதி ரமேஷ்

19.திப்பக்காபட்டி - திரு.சாமிநகர் தங்கவேல் 

20.முள்ளம்பட்டி-திரு.ரவிச்சந்திரன், சேந்தமங்கலம் ஒன்றியம் 

21.பூச்சிநாயக்கன்பட்டி தூசூர்பாலப்ட்டி - திரு. சின்னுசாமி, புதுச்சத்திரம்ஒன்றியம்-

22.சின்னதொட்டிபட்டி - திருமதி. ஜெயாமனோகர் 

23.கண்ணூர்பட்டி - திரு.பாலாஜி முத்துசாமி 

 கூட்டங்களை முன்னின்று சிப்பாக நடத்திய மேற்படி சமூக ஆர்வலர்களுக்கும் விடுதலைக்களம் கட்சி, அகிம்சா சோசலிக்ஷ கட்சி தலைவர்களுக்கும் மற்றும் பொதுமக்கள், குழந்தைகள், மாணவர்கள் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுகளையும் தொட்டியநாயக்கர் சமூகம் சார்பாகவும்,சீர்மரபு பழங்குடிகள் நலச்சங்கம் சார்பாகவும் தெரிவித்துக் கொள்வதாக தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved