🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அந்தமான் தீவில் வெட்டப்படும் 9.64 லட்சம் மரங்கள் - இயற்கையை அழித்தொழிக்கும் அரசு.

அந்தமானில் வெட்டப்படும் 9.64 லட்சம் மரங்கள் - சுற்றுச்சுழலுக்கு பேரபத்து.

அந்தமான் நிகோபார் தீவிலுள்ள நிகோபார் பகுதியில் ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தப்போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக அத்தீவிலுள்ள 9.64 லட்சம் மரங்கள் வெட்டப்படலாம் என மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சர் அஸ்வினிகுமார் சௌபே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சரக்குக் கப்பலுக்கான துறைமுகம், சர்வதேச விமான நிலையம், தொழில் நகர உருவாக்கம், 450 மெகாவோல்ட் எரிவாயு மற்றும் சோலார் மின்னுற்பத்தி நிலையங்கள் நிகோபார் வளர்ச்சித்திட்டங்கள் என்ற பெயரில் 130 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இத்திட்டத்திற்கு ஏற்கனவே 8.5 லட்சம் மரங்கள் அழிக்கப்படும் என்று கூறியிருந்த நிலையில் தற்போது அது 9.64 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீட்டுக்குழு 2022 இல் அனுமதியளித்திருந்த நிலையில், தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஏப்ரல் மாதம் தனியாக ஒரு நிபுணர் குழுவை அமைத்து அனுமதி வழங்கப்பட்டதிற்கான காரணங்களை ஆராய்ந்தது.

இத்திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிரதமரின் நண்பர் அதானிக்காகவே இவ்வளவு பெரிய இயற்கை அழிப்பை நடத்துவதாக தெரிவித்துள்ளனர். இதற்கான சட்டதிருத்தம் செய்ததில் பெரும் மோசடி நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுச்சுழல் அனுமதிக்காக மதிப்பிடப்படும் திட்டத்தின் விவரங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், மத்திய சுற்றுச்சூழல் நலத்துறை அமைச்சகத்தின் வலைதளத்தில்  வைக்கப்படுவது வழக்கம். ஆனால் சுற்றுச்சூழல் அனுமதிக்குப்பிறகும் நிகோபார் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்த விவரங்கள் இணைய தளத்தில் வெளியிடாமல் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இத்திட்டம் நிகோபார் தீவின் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்தை விளைவுக்கும். ஏற்கனவே பருவநிலை மாற்றத்தால் இந்தாண்டு தென்மேற்குப்பருவமழை பொய்த்துப்போய் நாடுமுழுவதும் கடும் வறட்சி நிலவுவதாகவும், மற்றொரு புறம் இமாச்சல பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக பெய்த மழையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 

இதற்கிடையே மாநிலப் பேரிடராக அறிவித்துள்ள  இமாச்சலப்பிரதே மாநில அரசு சேத மதிப்பு 10000 கோடி என்று கூறியுள்ள நிலையில் மத்திய அரசு வெறும் 200 கோடி மட்டுமே வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. எல்லா அழிவு வேலைகளையும் மத்திய அரசு செய்துவிட்டு சேதம் வரும்போது மக்களுக்கு உதவாத மத்திய அரசை பலரும் சமூக ஊடகங்களில் வசைபாடி வருகின்றனர். 

வழக்கம் போல் மத்திய அரசு எதும் கேட்காததுபோல் கள்ள மௌனம் சாதித்து வருகிறது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved