🔴 LIVE | முப்பெரும் விழா 2023


முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது - சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு 2021-இல் ஊழல் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கின் விசாரணை நடந்துவந்த நிலையில் சந்திரபாபு நாயுடு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஜெகன்மோகன் ரெட்டி அரசுக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். சந்திரபாபு நாயுடுவின் பொதுக்கூட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே சென்றது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி ஆந்திரா மாநிலம் நந்தியாலா நகரில் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு வேனில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். அன்று அதிகாலை சந்திரபாபு நாயுடுவை கைது செய்ய நந்தியாலா டிஐஜி தலைமையில் அதிக அளவிலான போலீஸார் அவரது வீட்டிற்கு சென்று சம்மன் வழங்கினர். சம்மனைப்பெற்றுக்கொண்ட நாயுடு காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும், தன்னுடைய வாகனத்திலேயே காவல்நிலையத்திற்கு வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு அனுமதி மறுத்த போலீசார், காவல்துறை வாகனத்திலே அழைத்துச்சென்று சுமார் 10 மணிநேர பயணத்திற்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.  70 வயதைக்கடந்த முன்னாள் முதல்வரை ஆந்திர போலீசார் மனிதாபிமற்ற முறையில் நடத்தியதாக பல தரப்பிலிருந்தும் கண்டனக்குரல் எழுந்தது.


முன்னதாக, கைது செய்யப்படுவதற்கு ஒருசில தினங்களுக்கு முன் ஒரு கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு தான் இன்னும் ஓரிரு நாட்களில் கைது செய்யப்படுவேன், இல்லாவிட்டால் தாக்கப்படுவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளார். இதனைக்கண்டித்து சென்னையில் வாழும் தெலுங்கு மக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் இராமராஜ், நவீன ஆந்திராவின் சிற்பியும், அகில இந்திய அரசியலை தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தவருமான சந்திரபாபு நாயுடுவை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஜெகன்மோகன் ரெட்டி அரசு கைது செய்துள்ளதாகவும், தற்போதைய நிலையில் நாட்டை வழிநடத்திச்செல்ல அறிவாற்றல் மிக்க தகுதியான ஒரே தலைவர் சந்திரபாபு நாயுடு. சிங்கத்தை சிறையிலடைத்துவிட்டு தேர்தலில் வெற்றிபெற நினைக்கும் சிறுநரிகளின் கனவு ஒருபோதும் பலிக்காது. இந்த வழக்குகளை உடைத்துக்கொண்டு சந்திரபாபு நாயுடு வெளிவருவார், ஆந்திராவை மீண்டும் ஆள்வார் என்று பேசினார்.


ஆந்திர முன்னாள் முதல்வர் கைதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பட்டத்தில் பிரபல திரை நட்சத்திரங்கள், திரைப்பட இயக்குனர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டது தமிழக அரசியல் கட்சியினருக்கும், அரசியல் விமசகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களும் ஆச்சரித்தோடு பார்த்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved