🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சாவர்க்கரின் சீடரை சிறையிலிருந்து மீட்ட பேரறிஞர் அண்ணா!

1967-இல் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட அறிஞர் அண்ணா அமெரிக்க நாட்டு சுற்றுப்பயணத்தின்போது, வாடிகன் நாட்டுக்கு சென்று அங்கு உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவர் போப் ஆண்டவர் (போப் ஆறாம் பால்) ஐச் சந்தித்தித்துப்பேச ஐந்து  நிமிடம் ஒதுக்கப்பட்டது.


மகாத்மா காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலம் தமிழ்நாட்டின் முதல்வர் நான் என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா.

போப்பாண்டவர் சொன்னார், அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!  தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து உங்களுக்கு என்ன பரிசு வேண்டுமென்றார்.

என்ன கேட்டாலும் தருவீர்களா..என்று கேட்டார் அண்ணா.  கேளுங்கள் தருகிறேன் என்றார் போப்பாண்டவர். 

போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மைக்கேல் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார்.

உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மைக்கேல் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டார் அண்ணா. 

சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா.

போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். 

யார் இந்த மோகன் ரானடே :

1930-ஆம் வருடம் மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலியில் பிறந்தவர் மோகன் ரானடே, வலது சாரி கொள்கைகளின் மீது பெரும் நாட்டம்கொண்டு இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக போராடி வந்த விநாயக் தாமோதர் சாவர்க்கருடைய சிந்தனைகளால் கவரப்பட்ட இவர் , தனது இயற்பெயரான 'மனோகர் அப்டே' என்பதை மோகன் ரானடே என்று மாற்றி  கொண்டுள்ளார் .

போர்ச்சுகல் கொடுங்கோல் ஆட்சியால் அடிமைத்தனத்தில் இருந்து கோவா மக்களை காப்பாற்ற , தனது 17 ஆம் வயதில் கோவா சுதந்திர போராட்ட குழுவில் இனைய முயற்சிகள் மேற்கொண்டு வந்த இவர் 1947-ஆம் ஆண்டு பள்ளி ஆசிரியர் என்ற போர்வையில் கோவாக்குள் நுழைந்தார். 'ஆசாத் கோமந்தக் தளம்' என்ற அமைப்பில் இணைந்து ஆயுத போராட்டத்திற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். 300  ரூபாய்க்கு தான் வாங்கிய ஒரு கை துப்பாக்கியை கொண்டு ஆயுத பயிற்சியில் ஈடுபட்டுவந்த ஆசாத் கோமந்தக் தளம் அமைப்பினருக்கு அப்பொழுது போர்ச்சுகல் பேரரசு கட்டுப்பாட்டில் இருந்து கோவா, தாமன் மற்றும் டையூ பகுதிகளை மீட்க அவர்களுக்கு அதிகளவில் ஆயுதங்கள் தேவைப்பட்டது .

1955-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி , ஆயுதங்களுக்காக பெட்டிம் காவல் நிலையத்தை வெறும் மூங்கில் கட்டைகளை கொண்டு  கைப்பற்ற  முயன்ற போது அவர்களுடைய முயற்சி தோல்வியில் முடிந்தது. போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்த மோகன் ரானடே போலீசாரால் சுத்தி வளைக்கப்பட்டு கைதும் செய்யப்பட்டார். தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக அவரை 5 வருடம் தனி சிறையில் வைத்து சித்ரவதை செய்த  போர்ச்சுக்கல்  அரசு 1960-ஆம் ஆண்டு அவர் மீது போர்க்குற்றங்களை சுமத்தி 26 வருட சிறைத்தண்டனை விதித்து அவரை போர்ச்சுகல்  நாட்டுக்கு நாடு கடத்தி அங்கு லிஸ்பன் சிறையில் அடைத்தது .

இந்தியா சுதந்திரம் அடைந்த 14 வருடங்கள் கழித்து 1961  ஆம் ஆண்டு கோவா சுதந்திரம் அடைந்திருந்தாலும் , மோகன் ரானடேவின் விடுதலை ஒரு கேள்வி குறியாகவே இருந்தது. முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பேயி உற்பட பல வலதுசாரி தலைவர்கள் அவர் விடுதலைக்காக உலக நாடுகளின் ஆதரவு வேண்டி குரல் கொடுத்திருந்தாலும் மோகன் ரானடே சுதந்திர போராட்டத்தை பற்றி கேள்விப்பட்ட பேரறிஞர் அண்ணா சரியான சமயத்தில் போப் ஆண்டவரிடம் கோரிக்கை வைத்து விடுதலை பெற்றுத்தந்தார்.

1979-இல் விடுதலை செய்யப்பட்டு டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்கே சென்றார். 

ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே என்று கேட்டார்.

அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன் என்று சொன்னார் அன்னை இந்திரா.

நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான் என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

அண்ணா மறைந்த சில நாட்களுக்கு பிறகு அவரது உடல் அடக்கம்  செய்யப்பட்டுள்ள மெரினா கடற்கரையில் ஒரு 40 வயது மதிக்கத்தக்க  வட நாட்டு இந்தியர் ஒருவர் அண்ணாவின் கல்லறையில் கண்ணீர் விட்டு அழுவதை பொது மக்கள் மூலம் பத்திரிகையாளர்களுக்கு  தெரியவந்தது. சிறிதுநேரம் கழித்து அவர் அண்ணா சமாதியில் இருந்து வெளியே வந்தபொழுது, பத்திரிகையாளர்கள் அவர் யார் என்று விசாரிக்கின்றனர் .

அவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் பேச தொடங்கிய அந்த வட நாட்டு மனிதர் , தனது பெயர் மோகன் ரானடே என்பதும் கோவா மாநிலம் அப்பொழுது போர்ச்சுகல் பேரரசு கட்டுப்பாட்டில் இருந்தபொழுது அதன் விடுதலைக்காக கோவா விடுதலை இயக்கத்தில் இணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னின்று நடத்திய மோகன் ரானடே நான்தான் என்பதை தெரிவித்தார்.

அவருடைய போராட்டங்களை பற்றி விரிவாக பேச ஆரம்பித்த மோகன் ரானடே கோவா விடுதலை போராட்டத்துக்காக  1955-ஆம் ஆண்டு ஆயுதங்களை சேகரிக்க கோவாவில் உள்ள பெட்டிம் காவல் நிலையத்தை வெறும் மூங்கில் கட்டைகளை கொண்டு தாக்கியபொழுது , அவர்களது முயற்சி தோல்வி அடைந்து மோகன் ரானடே  போர்ச்சுகல் நாட்டுக்கு நாடு கடத்தப்பட்ட 14 வருட சிறைவாசத்துக்கு பிறகு சில மாதங்களுக்கு முன்புதான் விடுதலை அடைந்து இந்தியா திரும்பியதாகவும் தன்னுடைய விடுதலைக்கு பெரும் பங்கு வகித்த அண்ணாவின் மறைவு செய்தி தெரிந்து அவருக்கு அஞ்சலி செலுத்த வந்துள்ளதாகவும் தெரிவித்தார் .

அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டார் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு. 1992-ஆம் ஆண்டு கோவாவில் இருந்து புனேக்கு சென்றார். பின்பு அண்ணாவை போலவே புற்றுநோய் பாதிப்பால் தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார் மோகன் ரானடே .

போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர்தான் நமது பேரறிஞர் அண்ணா.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved