🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அக்டோபர்'2 இல் தமிழக அரசுக்கெதிராக DNC சாதி சான்றிதழ் எரிப்பு போராட்டம்!

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சாதிகளைச் சேர்ந்த சீர்மரபு வகுப்பினர் DNT சாதி சான்றிதழ் கேட்டு 2014 முதல் போராடி வருகின்றனர். போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து 2019-இல் போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த எடப்பாடியார் தலைமையிலான அதிமுக அரசு டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்க ஒப்புக்கொண்டு, 2019 இல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வை ஆதரிக்க கோரியது. இதனை ஏற்றுக்கொண்ட சீர்மரபினர் நலச்சங்கம் உடனடியாக ஒற்றைச்சான்றிதழ் வழங்க அரசாணை பிறப்பிக்க கோரியது.

ஆனால் அரசாணை வெளியிடும்போது ஏற்கனவே பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்டதற்கு மாறாக டிஎன்சி/டிஎன்டி என இரட்டைச்சான்றிதழ் வழங்க அரசாணை பிறப்பித்தது. இதனை ஏற்க மறுத்த சீர்மரபினர் நலச்சங்கம் தொடர்ந்து டிஎன்டி சாதி சான்றிதழ் கேட்டு போராடி வருகிறது.

இதற்கிடையே கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது டிஎன்டி வழங்க மறுத்த அதிமுகவை எதிர்த்து சீர்மரபினர் நலச்சங்கம் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இதன் விளைவாக சட்டமன்றத் தேர்தலி அதிமுக படுதோல்வி அடைந்தது. அதிமுகவுக்கெதிரான டிஎன்டி சமூக வாக்குகளை அறுவடை செய்ய நினைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ் வழங்குவதாக வாக்குறுதியளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் முடிந்தும், பலமுறை வலியுறுத்தியும் இப்பிரச்சினையை காதுகொடுத்துக்கேட்க ஆளும்கட்சி தரப்பில் யாரும் முன்வரவில்லை.

அரசின் அலட்சியத்தால் அதிர்ச்சியடைந்துள்ள தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட டிஎன்டி சமூகங்கள் முதல்வரின் கவனத்தை ஈர்க்க பல முயற்சிகளை எடுத்துவருகிறது. இதற்கு இதுவரை பலனேதுமில்லாத நிலையில் அடுத்த கட்டமாக எந்தவித உபயோகமும் இல்லாத டிஎன்சி சான்றிதழ் எரிப்புப்போராட்டத்தை சீர்மரபினர் நலச்சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழகம் முழுவதுமுள்ள டிஎன்டி சாதியைச் சேர்ந்தவர்கள் அவரவர் வீட்டின் முன் தமிழக அரசு வழங்கிவரும் டிஎன்சி சாதி சான்றிதழை தீவைத்து எரிக்க உள்ளனர். இதன்படி நாமக்கல் மாவட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொட்டிய நாயக்கர் சமுதாயம் சார்பில் டிஎன்சி சாதி சான்றிதழ் எர்க்கும் போராட்டம் நடைபெறுமென்று அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி அறிவித்துள்ளார். இதுபோல் மற்ற மாவட்ட உறவுகளும் நமது உணர்வுகளை தமிழக அரசுக்கு தெரியப்படுத்தும் வகையில் சான்றிதழ் எரிப்பு போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved