🔴 LIVE | முப்பெரும் விழா 2023


திமுக அரசுக்கெதிராக தொட்டியநாயக்கர் கிராமங்கள் தோறும் குடும்பத்துடன் போராட்டம்!

தமிழகத்தில் தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபினர் என்று அழைக்கப்படும் சீர்மரபு பழங்குடி வகுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வரும் DNC/DNT இரட்டை சாதிச்சான்றிதழுக்கு பதிலாக DNT என்று ஒரே சாதிச்சான்றிதழ் வழங்கக்கோரி அச்சமூகங்கள் நீண்ட நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தேர்தலின்போது திமுக ஆட்சியமைந்தவுடன் ஒற்றை சாதிச்சான்றிதழ் கேட்டு போராடி வரும் 68 சீர்மரபின சமூகங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதியளித்தார்.

ஆனால் திமுக ஆட்சியமைந்து இரண்டரை ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் அரசாணை எண் 26/08.03.2019-இல் ஒரு சிறு திருத்தம் செய்ய இந்த அரசால் முடியவில்லை. சுமார் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் சம்மந்தப்பட்ட இக்கோரிக்கையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்று, அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித்தருமாறு மாவட்ட ஆட்சியர்கள், சம்மந்தப்பட்ட துறைச்செயலர்கள், அமைச்சர் பெருமக்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் என முதல்வர் அலுவலகம் வரை மனு அளித்தும் அரசின் செவிகளுக்கு சென்று சேரவில்லை. எனவே தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ள சீர்மரபினர் நலச்சங்கம் இன்று தமிழக அரசு வழங்கிவரும் டிஎன்சி சான்றிதழை எரிக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளது.


இதன்படி தொட்டியநாயக்கர் உள்ளிட்ட 68 சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இன்று மாலை 6 மணியளவில் அவரவர் இல்லங்கள் முன் நின்று DNT சாதிச்சான்றிதழ் வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்து, தமிழக அரசு வழங்கும் DNC சான்றிதழை எரிக்கிறோம் என்று வெள்ளைத்தாளில் எழுதி நெருப்பில் கொழுத்தி அதனை புகைப்படம் எடுத்து முகநூல், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவேற்றுமாறு சீர்மரபினர் நலச்சங்கத்திலுள்ள 68 சாதி அமைப்புகள் சமுதாய மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளன.

சீர்மரபின நலச்சங்கத்தின் அறிவிக்கையின்படி நாமக்கல் மாவட்டத்தில் தொட்டிய நாயக்கர் சமுதாயம் வாழும் கிராமங்கள் தோறும் போராட்டத்தை முன்னின்று நடத்த பொறுப்பாளர்களை தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை நியமனம் செய்துள்ளது. இதேபோல் வேட்டுவக்கவுண்டர், போயர் சமூகங்களின் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு,

பொறுப்பாளர்கள் -  தொட்டியநாயக்கர் சமூகம். 

 திருவாளர்கள்
1. ராஜா, மேற்கு பாலப்பட்டி
2.சதீஷ்,ஊனங்கள் பட்டி
3.தங்கராசு, புதுப்பட்டி சாலப்பாளையம்
4.அன்னை தங்கவேலு, மல்லிமாசம்பட்டி
5.பாலமுருகன், நாமக்கல்
6.முத்துசாமி, பெரியூர்
7.சரவணன், போடிநாயக்கன்பட்டி
8.சிவகுமார், நாயனப்பள்ளி
9.தேவராஜ், திருச்செங்கோடு
10.கதிர்வேல், திருச்செங்கோடு
11.செங்கோட்டுவேல், திருச்செங்கோடு
12.சிவக்குமார், மஞ்சநாயக்கனூர்
13.பாலு, மஞ்ச நாயக்கனூர் 
14. தாமரைச்செல்வன், பரமத்தி
15.தங்கவேல், சிக்கிநாயக்கன்பாளையம்
16.பாலு, மேட்டுக்கடை
17.போத்தன் நாயக்க,ர் மேட்டுக்கடை 
18.சக்திவேல், ஓலப்பட்டி
19.ரங்கசாமி, பொட்டிலிபாளையம் திருச்செங்கோடு
20.ரங்கசாமி, பொம்மப்பட்டி
21.அன்பழகன் பொம்மபட்டி
22.ஏடிசி பாலு, அன்புநகர் நாமக்கல்
23.முருகேசன், வடக்குப்பட்டி
24.சுப்பிரமணி, அப்பநாயக்கன்பாளையம்
25.கோவிந்தராஜ், முத்துசாமி, காரி பாப்பனூர்.

வேட்டுவகவண்டர் சமூகம். 

திருவாளர்கள்

பொன்னுசாமி சோலசிராமணி

சன்முகராஜா வழக்கறிஞர் பரமத்தி Tk. 

போயர் சமூகம்.

திருவாளர்கள்

மணி உ.ம.வி.களம்

சின்னுசாமி எருமப்பட்டி மற்றும் சீர்மரபு உறவுகள் பங்கேற்கின்றனர். தமிழக அரசுக்கெதிரான இப்போராட்டத்தை காந்தியவாதி ரமேஷ், நடராஜன் மேலப்பட்டி பரமத்தி, தங்கவேல் தண்டுவாடம்பட்டி ஆகியோர் மேற்பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர மாநிலம் முழுவதும் தமிழக அரசைக்கண்டித்து வால் போஸ்டர் ஒட்டி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved