🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அமெரிக்க வாழ் தமிழர்களின் இலக்கிய விருது வென்ற தமிழறிஞருக்கு வாழ்த்து!

அமெரிக்க வாழ் தமிழர்களின் இலக்கிய விருது வென்ற தமிழறிஞருக்கு வாழ்த்து! 

அமெரிக்க வாழ் தமிழர்களின் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் புதுமைப்பித்தன் நினைவு விருதுகளை வழங்கி வருகிறது. தமிழ் இலக்கிய உலகில் விளக்கு விருது மிகப் பெரிய கௌரவமாக பார்க்கப்படுகிறது. விளக்கு விருது தமிழில் புனைவு எழுதும் படைப்பாளிகும், அபுனைவு எழுதும் படைப்பாளி என இருவருக்கு அளிக்கப்படுகிறது. இந்த விருது படைப்பாளிகளின் மொத்தப் படைப்பை கவனத்தில் கொள்கிறது. 

அந்த வகையில், விளக்கு இலக்கிய அமைப்பின் 2022ம் ஆண்டுக்கான 27வது புதுமைப்பித்தன் நினைவு விருது"விளக்கு விருது" அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பினரால் புதுமைப்பித்தன் நினைவாக கலை - இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தமிழ்ச் சூழலில் தகுதிவாய்ந்த படைப்பாளிகள் உரிய அங்கீகாரமும், கவனமும் பெறவேண்டும் என்பதுதான் இந்த விருதின் நோக்கம்.

 இதுவரை சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி,நகுலன், ஹப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமனுஜம் (நாடகக் கலைஞர், 2003), ஞானக்கூத்தன், அம்பைதேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன் (2008), திலிப்குமார், தேவதச்சன், எம். ஏ. நுஃமான் (2011), கோணங்கி (2014), சி. மோகன் (2015), க.சமயவேல் (2016) ,ராஜ்கௌதமன்(2016), பாவண்ணன் (2018), பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியன்(2018), கவிஞர் கலாப்ரியா (2019), பேராசிரியர் க. பஞ்சாங்கம் (2019), ஸ்டாலின் ராஜாங்கம் (2020), சுகிர்தராணி (2020), அஸ்வகோஷ் (2021), வண்ணநிலவன் (2021) ஆகியோருக்கு "விளக்கு விருது" வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக 2022-ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது பெறுபவர்களை தேர்வுக்குழு நடுவர்கள் ஆய்வு செய்து தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி புனைவில்லாத படைப்பிற்கான விருது எழுத்தாளர் பொ.வேல்சாமி அவர்களுக்கும், புனைவிலக்கியத்திற்கான விருது சு.தமிழ்ச்செல்விக்கும் வழங்கப்படுகிறது.

தமிழ் இலக்கிய உலகில் சிறந்த ஆளுமையாகத் திகழும் நாமக்கல் திரு.பொ.வேல்சாமி அவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரு.வி.க விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுதவிர ஆனந்த விகடன் பத்திரிக்கையின் சார்பில் டாப் 10 மனிதர்கள் பிரிவில் விருது பெற்ற தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு ஒரிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகரும், A Journey of a Civilization நூலை எழுதியவருமான ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் வழங்கினார்.

 

அமெரிக்க வாழ் தமிழர்களின் இலக்கிய விருதினைப் பெறும் தமிழறிஞர் பொ.வேல்சாமி அவர்களுக்கு இராஜகம்பள சமுதாய மக்களின் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved