🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இராஜகம்பளத்தாரின் தொடர் அழுத்தம் - மனமிறங்குமா மாநில அரசு?

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபினர் சமுதாயங்கள் தமிழக முதல்வர் ஆலங்குளம் தொகுதி தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் வாக்குறுதி அளித்தபடி DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக சீர்மரபினர் நலச்சங்கத்தில் அங்கம் வகிக்கும் பல்வேறு சமூகத்தினர் பல வழிகளில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பில் விடுதலைக்களம் கட்சியினர் தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் கடந்த 3 ஆம் தேதி கலைஞர் கருணாநிதி சமாதியில் மனு அளிக்கும் போராட்டத்தை நடத்தி, அதில் பங்கேற்ற நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி, வீ.க.பொ. இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் துணைத்தலைவர் பெருமாள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் சுந்தரராஜன், சுப்பிரமணியன் மற்றும் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக இன்று மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையர் நீதியரசர் பாரதிதாசன் அவர்களை சீர்மரபினர் நலச்சங்கத்தின் செயல் தலைவரும், தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் மூத்த தலைவருமான பெ.இராமராஜ் மற்றும் சீர்மரபினர் நலச்சங்கத்தின் பொருளாளர் பள்ளிக்கரணை ஜெயராமன் ஆகியோர் நேரில் சந்தித்து DNT ஒற்றைச்சான்றிதழ் வழங்க அரசுக்கு பரிந்துரை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். சீர்மரபினரின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக நீதியரசர் பாரதிதாசன் வாக்குறுதியளித்தார். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved