🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வெறும் 34 ஆயிரத்திலும் ஐஏஎஸ் ஆகலாம்! நாங்க ரெடி, நீங்க ரெடியா?

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தியாவின் நெ.1 ஐஏஎஸ் அகாடமியான சங்கர் ஐஏஎஸ் அகாடமியும், வீரபாண்டிய கட்டபொம்மன் அகாடமியும் இணைந்து, இந்தியக் குடிமையியல் (IAS,IPS,ICS,IFS.IRS, etc.,) அதிகாரிகளுக்கான, இந்திய நடுவண் அரசுப்பணியாளர் தேர்வு முகமை (UPSE) ஆல் நடத்தப்படும் யூபிஎஸ்சி தேர்வு (UPSC) எழுத விரும்பும் இராஜகம்பளத்தார் சமுதாய மாணவ, மாணவியருக்கு இலவசமாகவும், சலுகை கட்டணத்திலும் பயிற்சி வழங்க வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்தவாரம் வெளியான நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளுக்கு பயிற்சி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுப்பணிகளில் கம்பளத்தாரின் இல்லாமையைப்போக்கி அனைத்து அதிகார மட்டத்திலும் சமுதாயத்தை போதிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்துவதை லட்சியமாகக்கொண்டு செயல்பட்டுவரும் வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கம், இந்தியாவின் முன்னனி பயிற்சி மையங்களில் ஒன்றான சங்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து மிகக்குறைந்த பொருட்செலவவில் குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வுகளுக்கு பயிற்சி வழங்க தீர்மானித்துள்ளது. இதன்மூலம் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் நேரடியாக சேரும் மாணவர்கள் ரூ.80000/- (ரூபாய் எண்பதாயிரம்) செலுத்தும் நிலையில், நமது இராஜகம்பளத்து சமுதாய இளைஞர்களுக்கு ரூ.34000/-(ரூபாய் முப்பத்தி நான்காயிரம்) மட்டும் செலுத்தி சிறந்த தரமான பயிற்சி பெறமுடியும். 

குரூப்-1 தேர்வில் வெற்றிபெறுவதின் மூலம் யூபிஎஸ்சி தேர்வு எழுதாமலே ஐஏஎஸ் ஆகமுடியும் என்பதும், தமிழகத்திற்குள்ளேயே வேலைபார்க்க முடியும் என்பதோடு யூபிஎஸ்சி தேர்வைவிட எளிமையாகவும் இருப்பதால் கடின உழைப்பு இருந்தால் எளிதாக வெற்றிபெறமுடியும். 

இதில் சிறப்பம்சமாக இராஜகபள சமுதாய நலச்சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ரூ.30000/- (ரூபாய் முப்பதாயிரம் மட்டும்) கட்டணம் செலுத்தினால் போதும். இக்கட்டணம் Preliminary & Mains ஆகிய இரண்டு தேர்வுகளுக்கான பயிற்சிக்கும் சேர்த்து என்பது குறிப்பிடத்தக்கது. 

மற்றுமொரு சிறப்புத்திட்டமாக "வெற்றித்திருமன் / திருமகள்" திட்டத்தின்படி, ரூ.34000/- செலுத்தி பயிலும் மாணவர்கள் Preliminary மற்றும் Mains தேர்வில் வெற்றிபெற்று பணியில் சேரும் மாணவ - மாணவியருக்கு அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பி வழங்கப்படும்.

இதுதவிர பெண்கள் அதிகம் விரும்பும் வங்கிப்பணிகளுக்கான தேர்வுக்கும் சங்கர் ஐஏஎஸ் அகாடமி சார்பில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் வெளியூர் மாணவ மாணவியர் அருகிலுள்ள கிளையில் சேர்ந்து பயிற்சி பெறக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. வறுமையில் வாடும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த மாணவ மாணவியருக்கு இலவசமாக பயிற்சி வழங்கவும் சங்கம் தயாராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved