🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கராத்தே போட்டியில் கலக்கும் சாப்டூர் ஜமீன்தார்! - தங்கப்பதக்கம் வென்றவருக்கு குவியும் வாழ்த்து!

ஊட்டி அண்ணா விளையாட்டு அரங்கில் தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சாப்டூர் இளைய ஜமீன்தார் ஹேமன் உதய் ராமசாமி-க்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விவரம் வருமாறு,

மதுரை மாவட்டம் பேரையூர் வட்டத்தில் உள்ள ஊர் சாப்டூர். சாப்டூரின் ஆதிவடிவ ஊர் மருதூர் ஆகும். சதுரகிரி மலையடிவார ஊர் என்பதால் அருவி­யிலிருந்து நீர் வீழ்ந்து ஓடும் சிற்றாரும் பாயும் ஊராக மருதூர் இன்றும் திகழ்கின்றது. ஜமீன்தார்கள் காலத்தில் எழுதப்பட்ட ‘மருதூர்த் தாலாட்டு’ ‘பூதரவிலாசம்’ ஆகிய இலக்கிய நூல்கள் இவ்ஊரின் தொன்மையை நிறுவுகின்றன. சதுரகிரிக்கட்டாரி ராமசாமி காமைய மகராஜா சாப்டூர் ஜமீன்தாராக ஆட்சி செய்தபோது பிறந்த மைந்தன் மீது பாடப்பட்ட நூலே மருதூர்த் தாலாட்டு என்பதை ‘திருப்புதல்வன் கட்டாரி நாகய காமராஜேந்திர ராமசாமிப் பாண்டியன் மீது மேற்படி சமஸ்தானத் தமிழ்வித்துவான் ச.சிதம்பரப் புலவரால் இயற்றப்பட்டது. மருதூர்த் தாலாட்டு நூலில் ஏழு ஆண்பாற் புலவர்களும் ஒரு பெண்பாற் புலவரும் சிறப்புக்கவிகள் படைத்து வாழ்த்தியுள்ளனர் என்பதிலிருந்து சப்டூர் ஜமீனின் பெருமையை உணரலாம்.

தற்போதைய ஜமீன்தார் இராமசாமி-உமா தம்பதியரின் மகனான ஹேமன் உதய் ராமசாமி ஊட்டியிலுள்ள JSS இன்டர்நேஷனல் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். தற்காப்புக் கலையில் ஆர்வம் கொண்டு கடந்த ஒரு சில வருடங்களாக கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறார். எனினும் வாளோடு போர்க்களத்தில் பல நூற்றாண்டு வாழ்ந்த சமுதாயத்தின் கொடிவழியில் வந்த தலைமகனாக, இயற்கையிலேயே தற்காப்புக் கலைகள் மரபணுவில் ஊறிப்போய் உள்ளதால், கராத்தே பயிற்சியில் சேர்ந்த ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாகவே தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளார் ஹேமன் உதய்.

நேற்று முன்தினம் (04.11.2023) ஊட்டி அண்ணா அரங்கில் நடைபெற்ற  OKINAWA GOJU-RYU INTERNATIONAL OPEN KARATE CHAMPIONSHIP , 15 year Black belt category பிரிவில் முதலிடம் பெற்ற ஹேமன் உதய்-க்கு சமூகநீதி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பொ.இராமராஜ், வீ.க.பொ.இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன், கம்பளவிருட்சம் அறக்கட்டளை தலைவர் உடுமலை சிவக்குமார் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved