🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வாராக்கடன் விவகாரம் - வாங்கிகள் கையில் ஆயுதத்தைக் கொடுத்த உச்சநீதிமன்றம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் திவால் ஆகிவிட்டால் அதன் நிறுவனர்களின் தனிப்பட்ட சொத்துக்களை வங்கிகள் வாராக்கடனுக்காக ஏலம் விடலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு சந்திரசூட் தலைமையில் அமைந்த மூவர் பெஞ்ச் ஒரு வரலாற்று தீர்ப்பை நேற்று (09.11.2023) வழங்கியுள்ளது.சுரேந்த்ர B.ஜிவ்ராஜிகா மற்றும் பிறர் Vs. ஓம்காரா அசட்ஸ் ரிகன்ஸ்ட்ரக்சன்ஸ் (பி) லிட் வழக்கில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.

பெருநிறுனங்களுக்கு (கார்ப்பரேட்) கடன் வழங்கும் பொழுது அதன் நிறுவனர்களிடம் தனிப்பட்ட கேரன்டி வாங்குவது வங்கிகளின் வழக்கம். IBC 95-100 பிரிவு அதிகாரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் 200க்கும் அதிகமான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. வழக்கு தொடுத்தவர்களில் முக்கியமானவர்கள் பெயர்கள் பின்வருமாறு: அனில் அம்பானி,சஞ்சய் சிங்கால், ஆர்த்தி சிங்கால், லலித் ஜெயின், அட்டுல் புஞ்ச், அஜய் மெஹரா, யோகேஷ் மேஹரா போன்ற பெரும் திமிங்கலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைமை நீதிபதி டிஒய்.சந்திரசூட், நீதியரசர்கள் JP பர்திவாலா,  மனோஜ் மிஸ்ரா அமர்வு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது. 1,63,916 கோடி ரூபாய் வாராக்கடன் வசூலுக்காக தீர்ப்பாயங்களில் 2289 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிகளின் கைகளில் மிகப்பெரிய ஆயுதத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பு வழங்கி இருப்பதாக கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், கல்விக்கடன், வீட்டுக்கடன். நகைக்கடை கட்டத்தவரும் சாமானியனை அச்சுறுத்தும் வங்கிகள் பெரும் முதலாளிகள் முன் என்ன செய்யப்போகின்றன என்பதைக் காண ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved