🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உலகின் மீகநீண்ட நெடுஞ்சாலையில் நடக்க ஆசையா?

விமானம், ரயில், பேருந்து போன்ற போக்குவரத்து வசதிகளற்ற நாட்களில் பல இடங்களுக்கு மக்கள் நடந்து தான் சென்றிருக்கிறார்கள். ஆனால் உலகிலேயே மிக நீண்ட பாதையை இதுவரை எந்த மனிதனும் கடந்தது இல்லையாம். தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து தொடங்கி கிழக்கு ரஷ்யாவின் மகதான் டவுனில் முடிவடையும் இந்த சாலையின் நீளம் 22387 கிமீ ஆகும். இந்த பாதையை நடந்து கடக்க பலரும் பல முறை இதுவரை முயன்றுள்ளனர். ஆனால் எவரும் இதுவரை இந்த முயற்சியில் வெற்றிப் பெற்றதில்லை. ஏன் என்று தெரியுமா?

 அதிசயங்கள் நிறைந்த பூமி:

இந்த பரந்த கிரகத்தில் மனிதர்களால் இன்னும் ஆராயப்படாத பல இடங்கள் உள்ளன. பூமி மிகப்பெரியது அதனுள் பல மர்மங்களும் சாகசங்களும் நிறைந்துள்ளது. முடியாத பல விஷயங்களையும் கூட மக்கள் முயற்சி செய்து வெற்றிக் கண்டுள்ளனர். ஆனால் எவரும் இந்த உலகின் மிக நீண்ட பாதையை இதுவரை நடந்து சென்றது இல்லை. தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள துறைமுக நகரமான மகதான் வரை நடக்கக்கூடிய மிக நீண்ட தூரமான இது இதுவரை இன்னும் ஆராயப்படாமலே இருக்கிறது.

 3 முறை எவரெஸ்ட்டில் ஏறுவதற்கு சமம்:

இடைவேளையின்றி தொடர்ந்து நடந்தால் 187 நாட்களில் 4,492 மணி நேரத்தில் நடையை முடிக்க முடியும். ஆனால் 17 நாடுகள், 6 நேர மண்டலங்கள் மற்றும் ஒரு ஆண்டின் அனைத்துப் பருவங்களையும் கடந்து தான் செல்ல வேண்டியிருக்கும். இதனால் தொடர் பயணங்கள் சாத்தியமில்லாமல் போகும். இருப்பினும், நீங்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் நடந்தால், அதை முடிக்க 562 நாட்கள் ஆகும். மொத்தத்தில், ஒரு நபர் பயணத்தை முடிக்க குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும். எவரெஸ்ட் சிகரத்தில் 13 முறை ஏறி இறங்குவதற்கு இந்த நீண்ட நடைப்பயணம் பெரும்பாலும் ஒப்பிடப்படுகிறது.

பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை:

உலகின் மற்றொரு மிக நீளமான நெடுஞ்சாலையின் பெயர் பான் அமெரிக்கன் நெடுஞ்சாலை. இது வடக்கு மற்றும் தென் அமெரிக்காவை இணைக்கும் இந்த சாலையானது இன்னும் முழுமையடையவில்லை. இதை உருவாக்குவதற்கான முதல் யோசனை 1923-ல் வந்தது. அதோடு இந்த சாலை 2 கண்டங்களை இணைக்கும் ஒரே பாதையாக கருதப்பட்டது. இருப்பினும், பின்னர் இந்த சாலை முக்கிய நெடுஞ்சாலைகளாக பிரிக்கப்பட்டது. இது அலாஸ்காவில் தொடங்கி அர்ஜென்டினாவில் முடிகிறது.

மொத்தம் 14 நாடுகள் இணைந்து இந்த நெடுஞ்சாலையை உருவாக்கியுள்ளன. அமெரிக்கா, பெரு, பனாமா, நிகரகுவா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், குவாத்தமாலா, எல் சால்வடார், கோஸ்டாரிகா, கொலம்பியா, சிலி, கனடா, பொலிவியா மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகள் தான் இவை. பல நாடுகளில் இந்த நெடுஞ்சாலையை அமைப்பதில் அமெரிக்கா அவர்களுக்கு உதவியது.

இந்த முழு நெடுஞ்சாலையும் எந்த இடையூறும் இல்லாமல் இருந்தாலும், அதன் ஒரு பகுதி (சுமார் 110 கி.மீ.) இதுவரை முடிக்கப்படவில்லை. அதனால் இது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. இது பனாமாவிற்கும் கொலம்பியாவிற்கும் இடையில் உள்ளது. இந்த பகுதி டேரியன் கேப் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் என பல சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. மக்கள் பெரும்பாலும் இந்த பகுதியை படகு அல்லது விமானம் மூலம் கடந்து செல்கின்றனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக 500 கிலோமீட்டர் பயணம் செய்தாலும், இந்த தூரத்தை கடக்க சுமார் 60 நாட்கள் ஆகும். கார்லோஸ் சான்டாமரியா என்ற சைக்கிள் ரைடர் இந்த பாதையை 117 நாட்களில் கடந்து முடித்தார். அவரது சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சாலை மெக்ஸிகோவிலிருந்து அர்ஜென்டினாவின் தலைநகருக்கு செல்கிறது. இருப்பினும், பல கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டால் அதன் மொத்த நீளம் 48,000 கி.மீ. நீங்கள் அமெரிக்காவின் 2 தலைநகரங்களுக்கு (வடக்கு மற்றும் தெற்கு) இடையே பயணம் செய்தால், எங்காவது இந்த பான் அமெரிக்கா நெடுஞ்சாலையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்று கூறப்படுகிறது. இந்த முழு பாதையும் அழகான மலைகள், ஆறுகள், பெரிய வெற்று சமவெளிகள் வழியாக செல்கிறது மற்றும் மக்கள் நீண்ட சாலை பயணங்களுக்கு வர விரும்புகிறார்கள்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved