🔴 LIVE | முப்பெரும் விழா 2023


இனி எப்போதும் வாலிப வயசுதான் - முதல்கட்ட சோதனை வெற்றி.

மார்க்கண்டேயனாக அதாவது இளமையாக இருக்க யாருக்குத் தான் பிடிக்காது. தங்களின் வயதைக் குறைத்துக் காண்பித்துக் கொள்ள ஆண், பெண் பாகுபாடின்றி பலரும் பல வழிகளில் மெனக்கெடுவதுண்டு.

பழங்காலத்தில் இருந்தே வயதைக் குறைப்பதற்கான சடங்கு, சம்பிரதாய  மூடநம்பிக்கைகள் இருந்தன. அறிவியலின் ஆராய்ச்சிகள் வளர்ச்சியடைந்த நிலையில், உயிரினங்களில் வயதை அதிகரிக்கக்கூடிய காரணிகளையும், அதனை மாற்றியமைக்கக் கூடிய தொடர் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டன.

வயதைக் குறைக்கும் ஆய்வுகளும், முயற்சிகளும் காலம் தொட்டே நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

இந்த நிலையில் எலிகளின் வயதைக் குறைக்கும் சோதனையில் 70 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இளம் பன்றிகளின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாக்கள் மற்றும் சிக்கலான நானோ துகள்களைக் கொண்டு வயதைக் குறைக்கும் E5 எனப்படும் வயதை மாற்றியமைக்கூடிய காரணியைக் கண்டுபிடித்துள்ளனர். இதனை எலிகளின் உடலில் செலுத்தி உள்ளனர். இந்த ஆன்டி ஏஜிங் தெரபி சிகிச்சையின்போது எலிகளின் திசுக்கள் மாற்றமடைந்துள்ளன. எலியின் ரத்தம், இதயம், கல்லீரல் திசுக்களின் மரபியல்ரீதியான  வயது பாதியாகக் குறைந்துள்ளது. அதோடு எலியின் செயல்பாடுகள், அறிவாற்றல் மற்றும் நடத்தையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

மனிதர்களின் வயது முதிர்வை தவிர்க்க 70 சதவீதம் அளவுக்கு உதவியாக இருக்கும் இந்த ஆய்வின் அடுத்த கட்டத்தில் 80 வயது முதிர்ந்த மனிதரை 26 வயது இளைஞராக தோற்றம் பெற வைக்க முடியும் என்று உறுதிபட கூறுகிறார்கள்.

அமெரிக்காவின் காலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட இந்த ஆய்வு குறித்து ஜெரோ சயின்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியாகி உள்ளது.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved