🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கழிவு நீர், கடல் நீரில் இருந்து எரிபொருள் தயாரிப்பு!

இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அசுத்தமான கழிவு நீர் அல்லது கடல்நீரை ஹைட்ரஜன் எரிபொருளாகவும், சுத்தீகரிக்கப்பட்ட நீராகவும் மாற்றும் சாதனத்தைக் கண்டுபிடித்து சாதனைபடைத்துள்ளனர். இந்த சாதனம் சூரிய சக்தியால் இயங்குகிறது.  இது மிதக்கும் செயற்கை இலை என அழைக்கப்படுகிறது.

இந்த சாதனத்தை தாவரங்கள் சூரிய ஒளியை உணவாக மாற்றும் ஒளிச்சேர்க்கையின் அடிப்படையில் உருவாக்கி உள்ளனர், அடிப்படை வளங்கள் இல்லாத பகுதிகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இது சுத்தமான எரிபொருள் மற்றும் நீர் கிடைப்பதற்கான தீர்வுகளுக்கு ஒரு உதாரணமாக அமையும் என்றும் கூறுகின்றனர்.

ஏற்கனவே கண்டுபிடித்த ‘செயற்கை இலை’ சாதனத்திற்குச் சுத்தமான நீர் ஆதாரங்கள் தேவை. ஆனால்  இப்போது கண்டுபிடித்துள்ள புதிய சாதனத்தை அசுத்தமான தண்ணீரில் பயன்படுத்தலாம் என்பதுடன் அந்த தண்ணீரைச் சுத்திகரித்து சுத்தமான குடிநீரை உற்பத்தி செய்ய முடியும்.  ஆகவே, ஒரே நேரத்தில் இரண்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண இந்த சாதனம் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved