🔴 LIVE | முப்பெரும் விழா 2023


வெப்பத்தைக் குறைக்கும் வெள்ளைக் காகிதம்!

சாதாரண வெள்ளைக்காகிதம் ஏர்கண்டிஷனர்க்கு போட்டியாக வர முடியுமா? முடியும் என்கிறது அமெரிக்காவில் மாசாசூசெட்சில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வு. இங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் வெள்ளைக்காகிதத்திற்கு டெப்ளான் படலம் பூசி அதை கட்டடத்தின் கூரை முழுவதும் விரித்து ஒட்டி விட்டனர்.  வெள்ளைக் காகிதம் சூரியக் கதிர்களை பெரும்பாலும் எதிரொளித்து திருப்பி அனுப்பி விடுகிறது.

இதனால் கட்டடத்தின் மீது வெப்பம் ஏறுவது வெகுவாக குறைக்கப்படுகிறது எந்த அளவுக்கு? வெளியே உள்ள வெப்பத்தைவிட கட்டிடத்திற்கு உள்ளே இருக்கும் வெப்பநிலை 10 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு கட்டடத்தின் உள்ளே இருக்கும்  குறைவாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். காகிதத்திற்கு விறைப்பையும், ஒட்டுவதற்கு ஒட்டுவதற்கு தேவையான பிடிப்பையும் தருகிறது. இருந்தாலும் இந்தக் காகிதத்தை மறுசுழற்சி செய்வதில் எந்த தடையும் இல்லை என்ற நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நம்ம ஊர் வெள்ளை சுண்ணாம்புக்கு அடுத்து இப்போது வெள்ளைக் காகிதம்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved