🔴 LIVE | முப்பெரும் விழா 2023

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கட்டபொம்மனாருக்கு நேரில் மாலை அணிவித்து மரியாதை!

தமிழக முன்னாள் முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். இதுபற்றிய விவரம் பின்வருமாறு,

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள் விழா நேற்று தமிழகமெங்கும் மிகுந்த எழுச்சியோடு கொண்டாடப்பட்டது. தமிழகத்திலுள்ள அரசியல் கட்சித்தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விழாக்களில் ஆங்காங்கே பங்கேற்று கட்டபொம்மனாருக்கு மாலை அணிவித்து சிறப்பு செய்தனர். 

அந்தவகையில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் தலைநகர் சென்னை, கிண்டி காந்திமண்டப வளாகத்தில் அமைந்துள்ள மாவீரன் கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். முன்னதாக காந்தி மண்டபம் வருகைதந்த முன்னாள் முதல்வரை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் மற்றும் இராஜகம்பள மேன்மக்கள் அறக்கட்டளை தலைவர் பெ.இராமராஜ் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன், அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் சிஎம்கே.ரெட்டி ஆகியோர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டு, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.  

கம்பளத்தாரின் வரவேற்புக்கிடையே பேசிய ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் "ஆண்டுதோறும் போடியில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிப்பது வழக்கம் என்றும், அரசியல் பணிகாரணமாக இன்று சென்னையில் இருப்பதால் கிண்டி வந்திருப்பாக" தெரிவித்தார்.  முன்னாள் முதல்வரோடு சட்ட மன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன், மாவட்டச் செயலாளர் சைதை பாபு ஆகியோர் வந்திருந்தனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved