🔴 LIVE | முப்பெரும் விழா 2023


கிண்டியிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு துரை வைகோ மாலையணிவித்து மரியாதை!

மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனாரின் 265-வது பிறந்தநாள் கடந்த 3-ஆம் தேதி தமிழகமெங்கும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சிகளில் அரசியல் கட்சித்தலைவர்கள் பலர் கலந்துகொண்டு கட்டபொம்மனுக்கு மரியாதை செலுத்தினர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ கிண்டியிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலையணிவித்தார். இதன் விவரம் வருமாறு,

கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சாதி மத பேதமின்றி அனைத்து சுதந்திரப்போராட்ட தியாகிகளையும் போற்றி பாராட்டி அவர்கள் தம் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களின்போது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவருபவர் மறுமலர்ச்சி திமுகவின் பொதுச்செயலாளர் வைகோ. இதில் கட்டபொம்மனாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களும் அடக்கம். வழக்கமாக கயத்தாறு அல்லது பாஞ்சாலங்குறிச்சி செல்லும் வைகோ அங்குள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலையிட்டு, அங்கே திரண்டிருக்கும் மக்களிடம் கட்டபொம்மனின் புகழ்குறித்து எழுச்சியுரையாற்றுவது வாடிக்கை.

இதன் தொடர்ச்சியாக மதிமுகவின் தலைமை நிலையச்செயலாளராக துரை வைகோ பொறுப்பேற்றுக்கொண்டது முதல்  கட்டபொம்மனாரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். இதுதவிர பாஞ்சாலங்குறிச்சி சக்கதேவி கோவில் சித்திரைத் திருவிழாவிலும் துரைவைகோ பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து கட்டபொம்மனார் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் மதுரை அல்லது கயத்தாறு செல்லும் துரை வைகோ அவர்கள் இந்த ஆண்டு கட்டபொம்மன் பிறந்தநாளின்போது மதுரை செல்வதாக முதலில் அறிவிப்பு வெளியானது. ஆனால் அன்று சென்னையில் தவிர்க்கமுடியாத நிகழ்ச்சி இருந்தபடியால் கிண்டியிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்தார் துரை வைகோ.


துரைவைகோ வின் வருகையை அடுத்து சென்னை மாநகர மாமன்ற உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான சைதை சுப்பிரமணி தலைமையில் மதிமுகவினர் திரண்டுநின்று வரவேற்பளித்தனர். காந்தி மண்டபம் வருகைதந்த துரை வைகோ விற்கு இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் தலைமையில் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். கட்டபொம்மன் சிலைக்கு மாலையணிவித்த துரைவைகோ, சுதந்திரப்போராட்ட மாவீரன் கட்டபொம்மனாருக்கு புகழ் வணக்கம் என்று முழக்கமிட்டார். பின் அங்கு கூடியிருந்த மக்களிடம் கட்டபொம்மன் வீரவரலாறு குறித்து ஒருசில நிமிடம் பேசினார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved