🔴 LIVE | முப்பெரும் விழா 2023


ஒரே நாளில் பத்து லட்சம் நன்கொடை - வாரி வழங்கிய வள்ளல்களுக்கு வாழ்த்துகள்.

தமிழகத்தில் கம்பளத்தார்கள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் ஒன்று நாமக்கல். 130-க்கும் மேற்பட்ட கிராமங்களில்  உள்ள கம்பளத்தார் குடும்பங்களில் இருந்து அதிகப்படியான கல்வியறிவோடு, அரசு ஊழியர்கள், தொழிலதிபர்கள், மென்பொருள் துறை பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என பலதரப்பினர் உலகின் பல்வேறு பகுதிகளிலும் வசிக்கின்றனர். இராஜகம்பள மகாஜன சங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக்கழகம் போன்ற அமைப்புகள் வலுவாக காலூன்றியிருந்ததின் விளைவாக சமுதாய ரீதியான பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதில் இங்கிருந்த தலைவர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக 90-களின் இறுதியில் நாமக்கல் மாவட்டத்தை மையமாகக்கொண்டு கொ.நாகராஜன் அவர்களால் தொடங்கப்பட்ட விடுதலைக்களம் அமைப்பு அரசியல் கட்சி அந்தஸ்தைப்பெற்று கால்நூற்றாண்டுகளுக்கு மேலாக களமாடி வருகிறது.

இந்நிலையில், அரசின் உயர்பொறுப்புகளில் பணியாற்றி வந்தவர்கள் ஓய்விற்குப்பின் ஒன்றிணைந்து 2015 ஆம் ஆண்டு பிற்பகுதியில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இளைய சமுதாயத்தினரை முன்னேற்றச்செய்யும் நோக்கோடு தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி செயல்படத் தொடங்கினர். இதற்காக மாவட்ட முழுவதுமுள்ள கிராமங்கள்தோறும் அறக்கட்டளை நிர்வாகிகள் சென்று உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி நிதி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பிடத்தக்க அளவில் வேகமாக வளர்ந்துவந்த அறக்கட்டளை, அதன் நிறுவன தலைவர்களில் ஒருவரான டிஎஸ்பி ரெங்கசாமி அவர்களின் மறைவு காரணமாகவும், அதனைத்தொடர்ந்து வந்த கொரோனா காரணமாகவும் ,அதன் இலக்கை அடைவதில் சிறிது சுணக்கம் ஏற்பட்டது. இருந்தபோதும் இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் வன்னியர் இடஒதுக்கீடு, டிஎன்டி ஒற்றைச்சான்றிதழ், ஓபிசி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் பிற சமுதாயங்களோடு இணைந்து பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

இதுதவிர, வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள கட்டபொம்மன் அகாடமி-யின் கட்டுமானப்பணியிலும், முப்பெரும்விழா நிகழ்ச்சியின் வெற்றிக்கும் பெருமளவு நிதியுதவி செய்து முக்கியப்பங்காற்றியுள்ளது நாமக்கல் தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை. 

இந்நிலையில், அறக்கட்டளைக்காக 2 கோடி மதிப்பில் கட்டிடம் கட்ட தீர்மானித்து, நாமக்கல் ஆட்சியர் அலுவலம் அருகே பிரதான இடத்தில் சுமார் 60 லட்சம் மதிப்பிலான நிலத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் கையக்கப்படுத்திய அறக்கட்டளையினர், தற்போது முறையான அரசு அனுமதி பெற்று கட்டுமானப்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். 6000 சதுரடியில் மூன்றடுக்கு கொண்ட கட்டிடத்தை நிர்மானம் செய்ய தீர்மானித்து அதற்காக நிதிதிரட்டும் பணியில்  அறக்கட்டளை நிர்வாகிகள் முனைப்போடு செயல்பட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி தலைமையிலான குழுவினர் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு சமுதாய உறவுகளைச் சந்தித்து ஒரே நாளில் பத்துலட்சம் நன்கொடை பெற்றுள்ளனர். அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு சமுதாய உறவுகள் அளித்துள்ள வரவேற்பும், ஒத்துழைப்பும் நம்பிக்கை அளிப்பதாகவும், அடுத்த ஓராண்டிற்குள் கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு சமுதாய்த்திற்காக அர்ப்பணிக்கப்படும் என்று அறக்கட்டளை தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


இதற்கிடையே நேற்று (26.01.2024) ஒரேநாளில் அறக்கட்டளைக்கு கட்டிடநிதியாக ரூபாய் பத்து லட்சம் வழங்கிய நாமக்கல் சமுதாய உறவுகளான

1.திரு.பூபதி,  சின்னதொட்டிபட்டி - ரூ.100000/-

2.பேரா.ராஜேந்திரன், தம்மநாயக்கன்பட்டி (போடிநாயக்கன்பட்டி) -  ரூ.100000/-

3.திரு.ராமசாமி, மாநில ஆவன எழுத்தர் கஞ்சநாயக்கனூர் - ரூ.100000/-

4.திரு.மணி (எ) முத்துசாமி, பெரியூர், ராசிபுரம் -  ரூ.100000/-

5.திரு.இரா.சிவக்குமார், ராசிபுரம் - ரூ.100000/-

6.திரு.தங்கப்பன், (சிவசக்தி ஜுவல்லர்ஸ்), ராசிபுரம் - ரூ.100000/-

7.திரு.D.ரகுநாதன், அப்பிநாயக்கன்பட்டி - ரூ.100000/-

8.திரு.R.வெங்கடாசலம், மு.தலைவர், அப்பிநாயக்கன்பட்டி, ராசிபுரம் - ரூ.100000/-

9.திரு.வ.பழனிவேல், த.நா.கிராம வங்கி மு.மேலாளர், கொண்டமநாயக்கனூர், மின்னாம்பள்ளி - ரூ.100000/-

10. திரு.நாகராஜ், கொக்கரசன்பேட்டை, திருச்செங்கோடு - ரூ.100000/- 

ஆகியோருக்கு, சென்னை வீரபாண்டிய கட்டபொம்மன் இராஜகம்பள சமுதாய நலச்சங்கத்தின் தலைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார். 

அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மதிப்புமிக்க கம்பளத்தார் சமுதாயத்தை மீண்டும் எழுச்சிபெறச்செய்யப் பாடுபடும் அமைப்புகளுக்கு நாமக்கல் மாவட்ட கம்பளத்தாரின் கொடையுள்ளம் என்றும் நம்பிக்கையும், உற்சாகமும் அளிக்கும் வகையில் இருந்துவருவது பெருமைக்குரியது. இந்த நல்ல எண்ணமும், ஒத்துழைப்பும், பங்களிப்பும் மற்ற மாவட்டங்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்த அறப்பணிக்கு தாராள நன்கொடை வழங்கிய வள்ளல்களுக்கும், அறக்கட்டளை தலைவரோடு இணைந்து பணியாற்றும் செயலாளார் துரைசாமி, பொருளாளர் சின்னுசாமி, அமைப்புச்செயலாளர் சரவணன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் சின்னதொட்டிபட்டி  மனோகர், பாலாஜி மெடிக்கல்ஸ் முத்துசாமி, சாமிநகர் தங்கவேல் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved