🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சாக்லேட்-இனிப்பு-பேக்கரி உணவுகளால் கல்லீரல் நோய் தாக்கும் ஆபத்து!

கல்லீரலைக் காப்பது எப்படி? 

பாகம்-2 

மருத்துவ ஆய்வுகள் வழி விளக்கம் 

5. தினமும் உடற்பயிற்சி செய்வது, மிதமான வேகத்தில் ஒரு மணிநேரம் நடப்பது, உடற்பயிற்சி கூடத்தில்  எக்சர்சைஸ் செய்வது கல்லீரலில் சேர்ந்துள்ள கொழுப்பை கரைக்க உதவுகிறது. உள்ளுறுப்பில் சேர்ந்த கொழுப்பை கரைக்க குறை மாவு உணவுமுறையுடன் உடல் பயிற்ச்சியும் சேரும் போது நல்ல விளைவு கிடைக்கிறது என்பதை பின்வரும் ஆராய்ச்சி விவரிக்கிறது. (https://www.ncbi.nlm.nih.gov/m/pubmed/25863524/) (Dr.ஃபரூக் அப்துல்லா, சிவகங்கை) 

6. மது அருந்தாதவர்களுக்கு வரும் கல்லீரல் கொழுப்பு சேரும் நோயுள்ளவர்களுக்கு (Non Alcoholic Fatty Liver Disease)  குடலில் இருக்கும் பாக்டீரியாக்களில் க்லெப்சியெல்லா நியுமோனியா (Klebsiella Pneumonia) எனும் பாக்டீரியாவின் அளவு மிக அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.  

இந்த பாக்டீரியா க்ளூகோஸ் மாவுச்சத்தை நொதித்தல் செய்து ஆல்கஹாலாக மாற்றுகிறது. நீங்கள் மது அருந்தாதவராக இருந்தாலும் சரியே. நீங்கள் தினமும் மாவுச்சத்து அதிகம் உண்பவராக இருந்தால் போதும், உங்கள் குடலில் இருக்கும் K.Pneumonia  பாக்டீரியா  நீங்கள் உண்ணும் மாவுச்சத்தில் உள்ள க்ளூகோசை  நொதித்து  ஆல்கஹாலாக மாற்றி விடும். இவர்களி்ன் ரத்தத்தில் ஆல்கஹால் அளவுகள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த ஆல்கஹால் அவர்களது கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். 

எனவே தயவு செய்து குழந்தைகள் எப்போதும் சாக்லேட் / இனிப்பு  / பேக்கரி உணவுகள் போன்றவற்றை உண்பது, கல்லீரல் வீக்க நோயை உருவாக்கும். இது தொடர்பான ஆராய்ச்சி கட்டுரை இதோ(https://www.sciencedaily.com/rel.../2019/09/190919142336.htm)

 7. நீங்கள் தினமும் காபி அருந்துபவரா? 

காபி அருந்துவது கல்லீரல் கொழுப்பு நோயில் இருந்து காக்கிறது என்று எலிகளில் செய்யப்பட்ட ஆய்வு கூறுகிறது. தினமும் ஆறு கப் எக்ஸ்பெரஸ்ஸோ  ப்ளாக் காபிக்கு சரிசமமான காபியை எலிகளுக்கு கொடுத்து  பரிசோதித்ததில்  அந்த எலிகளுக்கு கல்லீரல் வீக்க நோயில் இருந்து பாதுகாப்பு கிடைத்தது கண்டறியப்பட்டுள்ளது. 

இதற்கு காரணம் காபி அருந்துபவர்களில் சோனுலின் (Zonulin-1) என்ற புரதச்சத்தின் அளவு மிக அதிகமாக காணப்படுகிறது.  இந்த புரதச்சத்து  நமது குடலின் ஊடுறுவுதல் (Permeability)  தன்மையை குறைக்கிறது.  குடலின் ஊடுறுவுதல் தன்மை அதிகமாக இருப்பது கல்லீரல் நோய்க்கு காரணமாக அமைகிறது. இவ்வகையில்  இனிப்பு சேர்க்காத ப்ளாக் காபி அருந்துவது கல்லீரல் வீக்க நோயில் இருந்து பாதுகாப்பு வழங்குகிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது. (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5440772/) 

8. சிலர் அக்கேசனல் ட்ரிங்கிங் ( occasional drinking) ,  சோசியல் ட்ரிங்கிங் ( Social Drinking) என்று அவ்வப்போது மது அருந்துபவர்களுக்கு அதிக ரிஸ்க் உண்டு. அனுதினமும் மது அருந்துபவர்களுக்கு ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் நோய் வரும். 

ஆனால் அவ்வப்போது அதிகம் குடிக்கும் மக்களுக்கு பிரச்சனை "NAFLD (Non Alcoholic Fatty Liver)" ரூபத்தில் வரும். எனவே, தயவு செய்து அவ்வப்போது மது பருகுவதையும் நிறுத்திவிடுவது சிறந்தது. இதை நிரூபிக்கும் ஆராய்ச்சி கட்டுரை இதோ  (https://www.alcohol.org/effects/fatty-liver-disease/) (https://www.ucsf.edu/.../binge-drinking-may-quickly-lead...) (Dr.ஃபரூக் அப்துல்லா, சிவகங்கை) 

9. பேலியோ வாழ்க்கை முறையோடு உண்ணாவிரதமும் சேர்ந்து கொள்ளும் போது கல்லீரல் கொழுப்பு படியும் நோய் குணமாகிறது. இதை இண்டர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் என்று கூறுகிறோம். 

தினமும் மூன்று வேளை உண்ண வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. வாரம் ஒருமுறை இரண்டு வேளை மட்டும் உணவுன்பது, மாதம் ஒரு நாள் ஒரு வேளை மட்டும் உணவு உண்பது போன்றவற்றை செய்யலாம். உணவு உண்ணாமல் இருக்கும் போது நமது உடலில் உள்ளுறுப்புகளில் சேர்ந்துள்ள கொழுப்பு கரைக்கப்படுகிறது. தினமும் 16 மணிநேரம் விரதம் இருப்பது சிறந்தது. 

இந்த உண்ணாநிலை 72 மணிநேரம் வரைக்கும் செல்லலாம். இதனால் ஜீன்கள் மறுஉருவாக்கம் செய்யப்படுகின்றன. உடல் புணர்நிர்மாணம் செய்யப்படுகிறது. இந்த உண்ணா நிலையை நீரிழிவு உள்ள மக்கள் மருத்துவர் அறிவுரை இன்றி செய்வது தவறு. உண்ணாநிலை குறித்த ஆய்வு இதோ (https://www.universityherald.com/.../intermittent-fasting...)

10. தேவையற்ற நேரத்தில் தேவையற்ற மருந்துகளை உபயோகிப்பது கல்லீரலுக்கு ஊறு செய்யும். 

இதை Drug Abuse என்கிறோம்.  மருத்துவப்பரிந்துரை இன்றி மாத்திரைகளை எடுப்பது தவறு. சிலர் தலைவலிக்கு பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக்கொண்டே இருப்பார்கள்.  பாராசிட்டமால் பாதுகாப்பான மாத்திரை தான் என்றாலும், அதை தொடர்ந்து எடுப்பது கல்லீரலுக்கு ஊறு செய்யும். 

தலைவலி என்பது ஒரு அறிகுறி. அந்த அறிகுறிக்கு மட்டும் சிகிச்சை எடுத்து ப்ரயோஜனம் இல்லை. மாறாக அந்த அறிகுறியை உருவாக்கும் நோயை சரிசெய்ய வேண்டும். எனவே பாராசிட்டமால் மாத்திரையாகவே இருந்தாலும் அதை அதிகம் எடுப்பது தவறு. மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகள் எடுப்பது குறிப்பாக வலி நிவாரணிகள் எடுப்பது கல்லீரலுக்கு ஊறு செய்யும்.

மேலும் சில வியாதிகளுக்காக தொடர்ந்து எடுக்கப்படும் மாத்திரைகளி்ல் சில , கல்லீரல் கொழுப்பு நோயை உருவாக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். (https://www.hindawi.com/journals/bmri/2015/168905/) (https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4833155/) 

மேற்சொன்ன பத்து செய்திகளும் அறிவியல் பூர்வமாக நிரூபணமான ஆராய்ச்சிகள் மூலம் கல்லீரலில் கொழுப்பு சேரும் நோயை குணமாக்கும்  யுக்திகளைக் கண்டோம்.இதை நம் வாழ்வியலில்  ஏற்று நடந்து கல்லீரல் நலனைக் காப்பது நமது பொறுப்பு. 

Dr.A.B. ஃபரூக் அப்துல்லா,
பொது நல மருத்துவர்,
சிவகங்கை

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved