🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பிப்ரவரி 4-இல் திருச்சியில் மாபெரும் முற்றுகைப் போராட்டம்!

தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சமுதாயங்கள் அடங்கிய சீர்மரபினர் என்றழைக்கப்படும் டிஎன்சி வகுப்பினர் தங்களுக்கு டிஎன்சி என்பதற்கு பதிலாக டிஎன்டி என்று சாதிச்சான்றிதழ் வழங்க வேண்டும் என்று பலவருடங்களாக போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வரும் பிப்ரவரி 4-ஆம் நாள் திருச்சியில் விவசாய சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் போராட்டம் நடைபெறவுள்ளது. 

டிஎன்டி சான்றித ஏன் தேவை என்பது குறித்து ஒவ்வொருவரும் அறிந்துகொள்வது அவசியம்.

ஒரே டிஎன்டி சான்றின் அவசியம் ஒருவிளக்கம்:

அ.ஆ. 1310 நாள் 30.7.1979ன்படி DNT மக்களை DNC மக்களை தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை அ.ஆ.73 நாள் 1.2.1980ன்படி திரும்ப பெறப்பட்டுவிட்டது. அதன்பின் தமிழகத்தில் தொடர்ந்து DNC என்று பயன்படுத்தி வருவதும், சட்டம் 45/1994ல் DNC என்று பயன்படுத்தியதும் சட்டவிரோத செயல். 

1998ல் திமுக அமைச்சரவை மீண்டும் DNT என்று வழங்க பரிந்துரைத்தபோது, அப்போதைய TNBCC மத்திய அரசு மாற்றியுள்ளது மாநில அரசு மாற்ற முடியாது என்று பொய்யான பரிந்துரை செய்து தடுத்துவிட்டது.

2014ல் சீர்மரபினர் நலச்சங்கம் கீழக்குயில்குடி மாநாட்டிற்குப் பிறகு அரசு மீண்டும் DNT வழங்க பரிசீலித்தபோது 2015ல் TNBCC சட்டம் 45/1994ல் DNC என்று இருப்பதால் அச்சட்டத்தை திருத்தாமல் DNT வழங்கமுடியாது என்றும், அச்சட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழங்கு நிலுவையில் இருப்பதால் அதுமுடியாமல் சட்டத்தை திருத்த முடியாது என்று பரிந்துரைத்து மீண்டும் தடைகளை ஏற்படுத்தியது.

சீர்மரபினர் நலச்சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போதே இஸ்லாமியர், கிருஸ்துவர், அருந்ததியர் என்று பல இடஒதுக்கீடுகள் மேற்படி சட்டம் 45/1994யை திருத்தாமலே வழங்கிஇருக்கும்போது DNTக்கு மட்டும் வழக்கை காரணம் காட்டுவது அநீதி என்று தொடர் போராட்டம் நடத்தியதால்,  2018ல் 4 IAS அதிகாரிகள் ஆணையம் நியமிக்கப்பட்டு அவர்களும் மத்திய அரசின் கலேல்கர் மற்றும் லூக்கூர் ஆணையங்கள் DNC என்று மாற்ற பரிந்துரைத்தாலும் DNC என்று மாற்றி உத்தரவிடவில்லை என்றும், மற்ற மாநிலங்களிலும் DNC என்று மாற்றவில்லையென்றும், பெயர்மாற்றத்தல் கல்விச்சலுகை உரிமைகள் இழந்துள்ளது உண்மைதான் என்றும் அ.ஆ.1310 நாள் 30.7.1979யை திரும்ப பெற எந்த தடையும் இல்லையென்றும், இருப்பினும் சட்டத்தில்  DNC என்று உள்ளதால் மத்திய அரசு உரிமைகளைப் பெற DNT என்றும் தமிழகத்தில் DNC என்றும் வழங்க பரிந்துரைத்தது. அதை மாநில அரசு ஏற்றுக்கொண்டு அ.ஆ.26 நாள் 8.3.2019 DNT/DNC இரட்டைச் சான்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சீர்மரபினர் நலச்சங்கம் இரட்டைசான்று இழிவு என்று மீண்டும் தொடர் போராட்டம் நடத்தியதின் விளைவாக திமுக தலைவர் ஆலங்குளம் பரப்புரையில் திமுக ஆட்சிக்கு வந்தால் இரட்டைச்சான்று அநீதி சரிசெய்யப்படும் என்று வாக்குறுதியளித்தார். மேற்படி IAS அதிகாரிகள் அரசாணை 73யையோ சட்டம் 45/1994ல் உள்ள சரத்து 3 மற்றும் 7யையே கணக்கில் எடுக்காமல் 2015 TNBCC பரிந்துரை சரியென்று நினைத்து இப்படியொரு குழப்பமான பரிந்துரை வழங்கிவிட்டது. 

மீண்டும் சீர்மரபினர் நலச்சங்கம் போராட்டம் நடத்தியபின்பு மேற்படி சட்டம் 45/1994 சரத்து 3 மற்றும் 7யை 10.5% இடஒதுக்கீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் பரிசீலனை செய்து அரசுக்கு வகைப்படுத்தவும் உள்வகைப்படுத்தவும் அதிகாரமுள்ளது என்றும் தீர்ப்பளித்துள்ளது. எனவே அரசாணை மூலம் அரசு ஒரே சான்று வழங்க எந்த தடையும் இல்லை என்றும் இப்போதைய TNBCC பரிந்துரை செய்துள்ளது. எனவே அரசு விரைவில் ஒரே DNT சான்று வழங்கவும் அதிமுக செய்த வரலாற்று பிழையை சரி செய்து பழங்குடிகளில் சமூகநீதியைக் காக்க வேண்டும். இதுவே தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சமூகங்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது.

திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதிலிருந்து கடந்த மூன்று வருடங்களாக 68 சமுதாயங்களின் கோரிக்கையையும், திமுக தலைவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரியும் பலமுறை தமிழக அமைச்சர்களையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து வலியுறுத்தியாகிவிட்டது. இருந்தும் அரசு இதுவரை செவிசாய்க்காமல் கோடிக்கணக்கான மக்களை அலட்சியப்படுத்தி வருகிறது.

எனவே, தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட 68 சமுதாய மக்கள் போராடுவதைத் தவிர வேறுவழியில்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் வரும் பிப்ரவரி 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழக விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் ஒரு மாபெரும் போராட்டம் நடத்த சீர்மரபினர் நலச்சங்கம் தீர்மானித்துள்ளது.

இதில் தொட்டிய நாயக்கர் சமுதாயத்தின் சார்பாக சார்பாக விடுதலை களம் கட்சி நிறுவன தலைவர் கொ.நாகராஜ்  தலைமையில்  300 பேருக்கு மேல் கலந்து கொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்  ஒற்றை டிஎன்டி சான்றிதழ் பெற்றே ஆக வேண்டும். இதனால் நமது  குழந்தைகளுடைய கல்வி வேலைவாய்ப்பு  பாதிக்கப்பட்டுள்ளது, மத்திய மாநில அரசுகளுடைய கல்வி உதவித் தொகையைப் பெறமுடியாமல் உள்ளது.

இதனை கருத்தில்கொண்டு வாய்ப்புள்ள சமுதாய உறவுகள் ஒவ்வொருவரும்  இந்தப் போராட்டத்தில் பங்கேற்குமாறு தொட்டிய நாயக்கர் சமுதாய அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி மற்றும் சீர்மரபினர் நலசங்கத்தின் செயல்தலைவர் பெ.ராமராஜ் ஆகியோர் அழைப்பு விடுத்துள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved