🔴 LIVE | முப்பெரும் விழா 2023


அன்பு, அகிம்சை கொண்டு ஆங்கிலேய சாம்ராஜ்யத்தை வீழ்த்திய காந்தியை வீழ்த்தியது எது?

டால்ஸ்டாய்.. திருக்குறள்.. காந்தி !

தன்னுடைய பாரிஸ்டர் பட்டப்படிப்பு முடிந்தவுடன் வழக்கறிஞர் தொழிலை நடத்த முயன்று தோல்வி கண்ட காந்தி மறுஆண்டே தாதா அப்துல்லா என்பவரின் வணிக நிறுவன வழக்குக்காக தென்னாப்பிரிக்கா செல்கிறார். 

அங்கு பீட்டர்ஸ்மேரிஸ் பர்க் இரயில் நிலையத்தில் முதல் வகுப்பு ரயில் பெட்டியிலிருந்து காந்தி கீழே தள்ளி விடப்படுகிறார். அதேபோல், டர்பனில் வெள்ளையர்கள் வசிக்கும் பகுதியில் உலாவச் செல்லும்போது விரட்டப்படுகிறார். சாரட் வண்டியில் ஏறுவதற்கு வண்டியின் வெளியே உள்ளே படியில் அமரவைக்கப்படுகிறார். 

தென்னாப்ரிக்காவில் 10 சதவீதமேயுள்ள உள்ள ஆங்கிலேயர்கள் 90 சதவீதமுள்ள உள்ள ஆப்பிரிக்கர்கள், இந்தியர்கள் மற்றும் பிற ஆசிய நாட்டவர்களை மிகவும் இழிவாக நடத்துவதை எதிர்த்து போராட வேண்டும். அதற்கு முன் கறுப்பர்கள் எனப்படும் ஆப்பிரிக்கர்கள் இந்தியர்கள் பிற ஆசிய நாட்டவர்களை ஒருங்கிணைக்க வேண்டும். ஆயுதபயிற்சி கிடையாது.  ஆயுதங்கள் கிடையாது.  

அப்படியே ஆயுதங்கள் இருந்தாலும் உலகின் வல்லரசான பிரிட்டிஷாரை எதிர்த்து போராடி வெல்வதென்பது நடக்காத காரியம். அதற்காக அடிமையாகவும் வாழ முடியாது. என்ன செய்வது எந்த வழிமுறையில் போராடுவது என்று வெகுநேரம் பீட்டர்ஸ் மேரீஸ்பர்கில் உள்ள இரயில்நிலையத்திலேயே அமர்ந்து யோசிக்கிறார் காந்தி.

டால்ஸ்டாயின் "தி கிங்டம் ஆஃப் காட் வித்தின் யூ , ஜான் ரஸ்கினின் "அன்டூ தி லாஸ்ட்", "டேவிட் தரோ" வின் "சிவில் டிஸ்ஒபீடியன்ஸ் " போன்ற நூல்கள் காந்தியாருக்கு போராட்ட வழிகளை காண்பிக்கிறது. 

போராடாமல் வெல்ல முடியுமா? என்பது பெரும் ஐயமாகவே இருக்கிறது. அப்போது காந்தியார் டால்ஸ்டாயோடு நடந்த கடித போக்குவரத்துகளை நினைத்துப் பார்க்கிறார்.  அதில் டால்ஸ்டாய் சில ஆங்கில மேற்கோள்களை காட்டி போராட்டங்களை பற்றிக் கூறியிருப்பார்.  

    "இன்னா செய்தாரை ஒறுத்தால் அவர்நாண
    நன்னயம் செய்துவிடல்".

   "அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை".

     "என்பி லதனை வெயில் போலக்காயுமே 
      அன்பி லதனை அறம்"

      "அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றோ 
      செல்வத்தைத் தேய்க்கும் படை"

போன்ற நூற்றுக்கணக்கான குறள்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகளை காந்திக்கு எழுதிய கடிதத்தில் தெரியப்படுத்தியிருப்பார் டால்ஸ்டாய்.  

இந்த அற்புதமான கருத்துகள் எந்த மொழியிலுள்ளது என்று காந்தியார் கேட்க, அதற்கு டால்ஸ்டாய் இந்த அற்புதமான கருத்துகள் உங்கள் நாட்டு மொழியான தமிழில் உள்ள திருக்குறள் என்ற நூலில் உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்.

இந்த அற்புதமான நூலை தமிழிலேயே படிக்க வேண்டும் என்று முடிவெடுத்த காந்தி தமிழை கற்கத் தொடங்கினார்.  அதை வெற்றிகரமாக முடிக்கவில்லையென்றாலும் இந்த கருத்துகள் அவர் மனதில் ஆழமாக பதிந்து விட்டன.  

ஆயுதம் ஏந்தி போராடாமலேயே அஹிம்சை வழியிலேயே ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி உரிமைகளை பெறமுடியும் என்று உறுதியாக அவர் தீர்மானிப்பதற்கு ஒரு காரணமாக திருக்குறள் இருந்திருக்கிறது. தான் நடத்திய இந்தியன் ஒப்பீனியன் என்ற இதழை தமிழ், ஆங்கிலம், குஜராத்தி. இந்தி ஆகிய மொழிகளில் நடத்தினார். 

அதன்பிறகு தென்னாப்பிரிக்க அரசு கொண்டு வந்த நான்கு அடிமைப்படுத்தும் சட்டங்களையும் தன்னுடைய அகிம்சை வழியிலேயே உடைத்தெறிந்து இருபத்திரண்டு ஆண்டுகள் போராட்டமே வாழ்வாக கொண்டு இறுதியில் 1915 இல் இந்தியா திரும்பினார்.

இந்தியா திரும்பிய காந்தி அதே அகிம்சை பாதையில் சுதந்திரத்திற்காகப் போராடத் தொடங்கினார். அஹிம்சை வழியில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை தென்னாப்ரிக்காவிலும், இந்தியாவிலும் எதிர்கொண்டு வெற்றிபெற்ற காந்தியார் 1948-இல் இதே ஜனவரி 30 ஆம் நாள் கோட்சே எனும் கொடியவனின் துப்பாக்கிக்குண்டுக்கு பலியானார். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved