🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சமதர்ம நாயகன், ஒழுக்கசீலர் ஓமந்தூரார் பிறந்தநாள்!

முதல் முதல்வர்  ஓமந்தூராரின் பிறந்தநாள் பிப்ரவரி 1

1947 ஆம் ஆண்டு வரை திருப்பதி  கோவிலில் ஒடுக்கபட்டவர்களுக்கு அனுமதி கிடையாது. அனுமதிக்க வேண்டும் என சட்டமியற்றி ஒடுக்கப்பட்டவர்களை அனுமதித்ததோடு அறங்காவலராக ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்தவரை நியமித்தார். 

ஒடுக்கப்பட்டவர்களை கோவிலுக்குள் நுழையகூடாது சனாதானத்தை பின்பற்றிய சட்டம் கூறுகிறது. தன்னுடைய பினாமி வைத்தியநாதர் மீது கோவில் நுழைவு  சட்டத்தின் படி தண்டிக்கப்படும் வாய்ப்பு இருந்ததால் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்லலாம் என சட்டத்தை திருத்தினார் இராஜாஜி.  மற்ற எந்த கோவிலிலும் அனுமதிக்கவில்லை. ஒடுக்கப்பட்டவர்களை அனைத்து கோவிலுக்குள்ளும் அனுமதிக்க வேண்டும் என சட்டம் இயற்றியதோடு, அனுமதிக்காத கோவிலுக்கு மானியம் கிடைக்காது என அறிவித்தார். பலர் இசைந்தனர். ஒடுக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு செல்ல ஆரம்பித்தனர். ஆம் தாடி இல்லாத பெரியார் என்றே இவரை அழைத்தனர். 

தொழிலாளர் நலத்துறையின் கீழ் ஹரிஜன் நலத்துறை எனும் பெயரை மாற்றி ஆதிதிராவிடர் நலத்துறை என தனித்துறையாக அறிவித்ததோடு ஆணையரையும் நியமித்தார். 

மதுவிலக்கையும் அமுல்படுத்தியவர் இவரே. அமுல்படுத்தியதோடு விட வில்லை. காலையில் உற்சாகத்திற்காகவே கள்ளை அருந்துகிறார்கள். மாற்றாக ஒரு பாணம் வேண்டும் என கண்ணன் தேவன் டீ நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கிராமங்களில் இலவசமாக தேநீர் வழங்க ஏற்பாடு செய்தார். இன்றும் கிராமங்களில் காலையில் தேநீர் அருந்தும் பழக்கம்  அதிகம் இருப்பதற்கு காரணம் இச்செயலே. 

தமிழில் கலைச்சொற்கள் உருவாவதற்கு அடித்தளமிட்டவர். ஊழலற்ற  எளிமையான ஆட்சியை வழங்கினார். சந்திக்க வருபவர்கள் என்ன காரணத்திற்கு வருகிறார்கள் என குறிப்பெழுதி அனுப்பவேண்டும் அவசியமிருந்தால் மட்டுமே சந்திப்பேன் என உத்தரவிட்டார். கட்சிக்காரார்களை " அனுசரித்து" செல்லமாட்டேங்கிறார் என நேர்மைக்கும் எளிமைக்கும் பெயர் பெற்ற காங்கிரஸ் தலைவர் இவரை முதல்வர் பதவியிலுருந்து நீக்க முயற்சித்து வெற்றியும் பெற்றார். 

இளம் வயதிலே தன் மனைவி மக்களை இழந்து தனிமரமாகியவர் இந்த நாட்டிற்கு சேவை செய்யவே சுமைகளை எல்லாம் இறைவன் பறித்துக்கொண்டார் என நினைத்து மக்கள் பணியாற்றிய ஓமந்தூரார் பதவி விலகி வடலூர் வள்ளலார் மடத்திற்கு சென்றார்.  வறண்டு கிடந்த பூமியை விவசாயம் செய்து பசுமையாக்கினார். தைப்பூச திருநாளில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரை அழைத்து வந்து பேசவைத்தவர் ஓமந்தூரார். உடல்நிலை சரியில்லாத பொழுது அவரை பரமாரித்து, இயற்கை எய்திய பிறகு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்தவர் கலைஞர். 

அப்பழுக்கற்ற தலைவர், முதலாளிகளும் ஜமீன்களும் அலங்கரித்து வந்த முதல்வர் பதவியை  விவசாய குடும்பத்தில் பிறந்த முதல் முதல்வர் ஓமந்தூரார். 

அவரின் பெருமையை போற்றும் விதமாக நினைவுத்தபால் தலை வெளியிட முயற்சி செய்து வெற்றியும் கண்டவர் வைகோ. 

பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி முதல்வர், சுதந்திர இந்தியாவின் முதல் முதல்வர்  ஓமந்தூர் பிறந்தநாளில் நினைவுகூர்வோம்.

நன்றி:மானாமதுரை மருது

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved