🔴 LIVE | முப்பெரும் விழா 2023


உயர்சாதிகளுக்கானதே மத்திய பட்ஜெட் - சமூகநீதி கூட்டமைப்பு விமர்சனம்.

நேற்று (01.02.2024) நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வாசித்தார். பட்ஜெட் குறித்து ஆளும் கட்சியினர் மகிழ்ச்சியோடு கருத்துக்களை கூறிவரும் நிலையில், தொட்டிய நாயக்கர் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்கள் அடங்கிய சமூகநீதி கூட்டமைப்பு, சீர்மாபினர் நலசங்கம், விவசாயிகள் சங்கம் இணைந்த கூட்டமைப்பு மத்திய பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து சமூகநீதி கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது, 

உறவினர்களுக்கு வணக்கம், ஆண்டுதோறும் பாராளுமன்றத்தில் மத்திய அரசு வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்து, அவையின் ஒப்புதல் பெற்று அதை நடைமுறைப்படுத்துவது அரசமைப்புச் சட்டப்படியான கட்டாய வழக்கம். அடுத்த அரசை தேர்வு செய்வதற்கான பொதுத் தேர்தல் இந்த மாதமே அறிவிக்கவுள்ளதாலும், அடுத்த அரசு மே மாதத்தில் வரும் என்பதாலும், இந்த ஆண்டு இடைக்கால (மூன்று மாதங்களுக்கு) நிதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழு அறிக்கை அடுத்த அரசு தாக்கல் செய்யும். 

இன்றைய பத்திரிக்கைகளிலும் ஊடகங்களிலும் நிதி அறிக்கை குறித்து நிறைய வாத, விவாதங்களை அறிந்திருப்பீர்கள். நாம் அதைப்பற்றி நேற்றைய கூட்டத்தில் விளக்கியுள்ளோம். இன்று சமூகநீதி பார்வையில் நிதி அறிக்கையை தெரிந்துகொள்வோம். 

இந்த அறிக்கையில் சமூகநீதி சம்மந்தமாக சொல்லப்பட்டுள்ள விபரங்களில் முக்கியமாக உள்ளது என்னவென்றால், முதலில் பத்தி 3ல் சொல்லப்பட்டுள்ள இந்த அரசின் மந்திரம். அதாவது  அனைவருடன் அனைவரின் வளர்ச்சிக்காக அனைவரின் நம்பிக்கையுடன் செயல்படுவது. இந்த அரசின் வளர்ச்சித் தத்துவம் சமூகத்தின் எல்லாநிலையில் உள்ளவர்களையும், எல்லா பிராந்தியங்களையும் உள்ளடக்கிய முன்னேற்றமாகும். 

இரண்டாவதாக பத்தி 7 முதல் 9 வரை மூன்று பத்திகளுக்கு சமூகநீதி என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பத்தி 7ல் எல்லா சாதிகளையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்றும், பத்தி 9ல் மாண்புமிகு பிரதமர் மோடி  ஏழை, பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் என்ற 4 முக்கிய சாதிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்று நம்புகிறார் என்றும் கூறிப்பிடப்பட்டுள்ளது. பத்தி 8ல் சமூகநீதி என்பது கடந்த காலங்களில் அரசியல் முழக்கமாகவே இருந்தது. எங்கள் அரசுக்கு சமூகநீதி அவசியமான அரசாட்சிமுறை. அது செயல்பாட்டில் மதச்சார்பற்றநிலை. ஊழலையும், சொந்தங்களுக்கு சலுகை வழங்குவதையும் ஒழிப்பது. யார் எந்த சாதியாக இருந்தாலும் அனைவருக்கும் தெகட்ட தெகட்ட வாய்ப்புக்களை வழங்குவதுதான் உண்மையான சமூகநீதி என்றும் சொல்லப்பட்டுள்ளது. 

தொடர்ந்து பத்தி 10 முதல் 20வரை இந்த 4 சாதிகளில் ஏழைச்சாதியில் 25 கோடி ஏழைகள் பன்முக வறுமையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர், 11 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது, இளைஞர்களுக்காக 7 IITs, 7 IIMs, 15 AIMS, 16 IIITs மற்றும் 390 பல்கலைக்கழகங்கள் உருவாக்கியுள்ளோம், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது.

சமூகநீதி பற்றி இந்தியாவில் இருக்கும் தலைவர்கள் மற்றும் கட்சிகள் யாருக்கும் சரியான புரிதல் இல்லை என்று நாம் பலமுறை ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம். இந்த நிதி அறிக்கை ஒருபடிமேலாக சமூகநீதியையே குழிதோண்டி புதைக்கும்விதமாக புதுவிளக்கத்தை கொடுத்து அதை நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்கப்போகிறது. மேலும், இந்த அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் பெரும் இடைவெளியுள்ளது. முன்னேறிய வகுப்பிலிருக்கும் ஏழைகளுக்கு வாய்ப்புக்களைக் கொடுக்க (அவர்கள் வாக்கு வங்கியைத் தக்க வைக்க) 10% EWS இடஒதுக்கீடு என்ற பெயரில் ஏழ்மையிலும் ஏழ்மையில் இருக்கும் SC/ST/OBC/DNT ஏழைகளின் வாய்ப்புக்களைப் பறித்துகொண்ட கொடூரமான அரசுதான் இந்த அரசு. அந்த அநீதியைத் தட்டிக்கேட்க துப்புக்கெட்டவர்களாக ஈனப்பிறவிகளாக நாம் வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம். 

ஊழலை ஒழிப்பதுதான் சமூகநீதி என்கிறது. ஆனால் Transparency International அறிக்கையின்படி 180 நாடுகளில் 2022ல் 85வது இடத்திலிருந்த நாடு 2023ல் 93வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.  பெண்கள் இடஒதுக்கீட்டிலும் ஓபிசி பெண்களுக்கு ஓரவஞ்சகம்செய்து ஓரம்கட்டியுள்ளது. ஏழ்மையிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்ற அரசு, அடுத்த வரியிலேயே 80 கோடிப்பேருக்கு இலவச உணவுதானியம் வழங்குகிறோம் என்று தம்பட்டம் அடிக்கின்றது. உணவுகூட வாங்க முடியாதவர்கள் இலவச உணவை நம்பி இருப்பவர்களை எப்படி வறுமையிலிருந்து விடுபட்டுவிட்டனர் என்று கூறமுடியும். இப்படி எப்படி பார்த்தாலும் நாம் அனைவரும் அரசமைப்புசட்டத்தின்  நோக்கத்தை நிறைவேற்றத் தவறிவிட்டோம். அதற்கு எதிர்மாறான விஷயங்களை எல்லா அரசும் துணிச்சலாக செய்துகொண்டுள்ளது. நாட்டை நாசம் செய்துகொண்டுள்ளோம். 

இதுமாற வேண்டும் என்றால் சமத்துவ சமூதாயம் உருவாக திட்டங்களை வகுத்து செயல்படுத்த வேண்டும். மத்திய மாநில அரசுகள் வகுப்புவாரி வாய்ப்புக்கள், வளம், சொத்து, வருவாய், வேலை, தொழில், அதிகாரம், அறிவியல், கலை, இலக்கியம் என்று எல்லா நலங்களிலும் SC/ST/OBC/DNT வகுப்பினர் பெற்றுள்ள பங்கு என்ன என்று உடணே வெளியிடவேண்டும். உண்மையில் 80% இருக்கும்  SC/ST/OBC/DNT பங்கு என்ன என்பதை தோராயமாகப் பார்ப்போம்.

வரிசை எண்: துறை/வசதி,  அதிகாரம் (80% மக்கள் தொகை கொண்ட SC/ST/OBC/DNT சமூகங்களின் பங்கு, 20% மக்கள் தொகை கொண்ட முன்னேறிய வகுப்பின் பங்கு).

1). உச்சநீதிமன்ற நீதிபதிகள் -  80க்கு 1% ; 20க்கு 99%.

2).  மத்திய கேபினட் அமைச்சர்கள் - 80க்கு 30% ; 20க்கு 70%.

3).  மத்திய அரசு செயலாளர்கள் - 80க்கு 3% ; 20க்கு 97%

4). மத்திய அரசு  முதல் வகுப்பு அதிகாரிகள் - 80க்கு3 0% ; 20க்கு70%

5). மத்திய அரசில் மற்ற பதவிகள் -  80க்கு 35%;  20க்கு65%

6). துப்பரவுபணியாளர்கள்- 80க்கு 60%; 20க்கு 40%

7). மொத்த சொத்து - 80க்கு 15%; 20க்கு 85%

8). மொத்த வருமானம் - 80க்கு10%; 20க்கு 90%

9).  இராணுவஉயர்பதவி - 80க்கு 3%; 20க்கு 97%

10) . இராணுவ வீரர்கள் - 80க்கு 40%; 20க்கு 60%

11).  பெரும் தொழில் நிறுவனங்கள் - 80க்கு10%; 20க்கு 90%

12).  அறிவியல் துறை - 80க்கு3 %,; 20க்கு 97%

13). IIT, IIM. AIMS - 80க்கு 10%; 20க்கு 90%

14).  வெளிநாடுகளில் உயர் பதவிகள் - 80க்கு 10%; 20க்கு 90%

15).  அரசுசெலவின்பயன் -  80க்கு 30%; 20க்கு 70%

16).  பங்குச்சந்தை - 80க்கு 10%; 20க்கு 90%

17). வறுமை - 80க்கு 80%; 20க்கு 20%

18).  உயர்கல்வி - 80க்கு 20%; 20க்கு 80%

19).  கல்விக்கடன் - 80க்கு20%; 20க்கு 80%

20).  நிதி ஆதாரம் -  80 க்கு 10%; 20க்கு 90%

இப்படி பல அளவுகளில் பார்த்தாலும் 20% மக்களே எல்லா வாய்ப்புக்களையும் வைத்துக்கொண்டு நமக்கு மட்டும் வாயில் வடை சுட்டு வழங்குவதை எத்தனை நாளைக்கு வேடிக்கை பார்க்கப்போகிறோம்.

தொடரும்…

BY ABC-EVM

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved