🔴 LIVE | முப்பெரும் விழா 2023


சுங்கச்சாவடி முற்றுகையிட்ட நூற்றுக்கணக்கான இராஜகம்பளத்தார்கள் கைது!

தொட்டியநாயக்கர் உள்ளிட்ட 68 சீர்மரபினர் வகுப்பினர் மற்றும் விவசாய சங்கங்கள் சார்பில் நேற்று (04.02.2024) திருச்சி சமயபுரம் டோல்கேட் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். இதன் விவரம் வருமாறு,

1) 60 வயதிற்கு மேற்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ஓய்வூதியம் ரூ.5,000/- வழங்க வேண்டும்.

2) அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் இரண்டு மடங்கு இலாபகரமான விலை வழங்க வேண்டும்.

3) சீர்மரபு வகுப்பினருக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு DNC, DNT என்று இரட்டை சாதி சான்றிதழ் இருப்பதை ஒரே சாதி சான்றிதழ் DNT-யாக வழங்க வேண்டும்.

4) 2021-சட்டமன்ற தேர்தலின் போது தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பொதுக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் DNT ஒற்றை சான்றிதழ் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும்.

5) சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ஆகிய கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று தென்னிந்திய விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு, சீர்மரபினர் நலசங்கத்தின் பொதுச்செயலாளர் தவமணியம்மாள் தலைமையில் 300-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தொட்டிய நாயக்கர் சமூகத்தின் சார்பில் விடுதலைக்களம் கட்சியின் நிறுவன தலைவர் கொ.நாகராஜன் தலைமையில் போராட்டத்தில் பங்கேற்ற ஏராளமான தொட்டிய நாயக்கர் சமுதாய போராளிகளை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


இதனையடுத்து, ஒற்றை DNT சான்று, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய,மாநில அரசுகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு நாமக்கல் தொட்டிய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் மு.பழனிச்சாமி நன்றி தெரிவித்துக்கொண்டுள்ள்ளார். 

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved