🔴 LIVE | முப்பெரும் விழா 2023


பூமிப்பந்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக சூரிய ஒளி படாத இடத்தில் சூரிய ஒளி வெள்ளம் பாய்ச்சல்!

ஐரோப்பா நாடுகளின் ஒன்றான நார்வே நாட்டின் தென் பகுதியில் மலைகள் சூழ்ந்த பகுதியாக இருக்கிறது. இந்த பகுதியில் பள்ளத்தாக்குகள் அதிகம். இப்படியாகப் பார்ப்பவர்கள் கண்களைக் கவரும் வகையில் ருஜூகான் என்ற நகரம் உள்ளது.

1900 களில் இந்த ஊரில் பெரிய அளவில் மக்கள் யாரும் வசிக்கவில்லை சிலர் மட்டுமே வசித்து வந்தனர். மேலும், அப்பகுதியில் உள்ள கோசன் என்ற அழகான நீர்வீழ்ச்சி அப்பகுதியில் ஒரு முக்கிய சுற்றுலா ஈர்ப்பு தளமாக இருந்து வந்தது. இந்நிலையில், அப்பகுதியில் ஒரு உரத்தொழிற்சாலை அமைக்கப்பட்டது.



அந்தத் தொழிற்சாலையை நம்பியும், அங்குள்ள நீர்வளத்தை வைத்தும் அந்த ஊருக்குப் பலர் குடி பெயர்ந்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வெறும் 300 பேர் மட்டுமே இருந்த நகரம் இன்று 3500 பேரைக் கொண்டு அமைந்துள்ளது. இந்த ஊரின் சிறப்பே இந்த ஊருக்குள் நேரடியாகச் சூரிய ஒளிபட்டதே இல்லை என்பது தான்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பரிசிலிருந்து இந்த நகருக்கு வந்த மார்டின் ஆண்டர்சன் என்பவர் இந்த நகருக்கு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சூரிய ஒளியைக் கொண்டு வர எண்ணினார். அதற்காக அவர் தேர்வு செய்தது. மலை மீது பெரிய பெரிய கண்ணாடிகளைப் பொறுத்தி அதன் ஒளியை நகருக்கும் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும் என எண்ணினார்.

இதையடுத்து அவர் முதல் முயற்சியாக மலைகளின் மீது 450 மீட்டர் கிட்டத்தட்ட 0.5 கிலோ மீட்டர் உயரத்திற்குக் கண்ணாடிகளை பொருத்தினார். சூரிய காந்தி எப்பொழுது சூரியனை நோக்கி இருக்குமே அது போல அவர் பொருத்திய கண்ணாடியும் சூரியன் எங்கிருந்தாலும் அதன் ஒளியைவாங்கி ஊருக்குள் பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைத்தார்.

இதைச் செய்து முடிக்க இவருக்குக் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த திட்டத்திற்காக இவர் 8 லட்சம் அமெரிக்க டாலர் பணத்தையும் செலவு செய்துள்ளார். இறுதியாக ஆண்டு முழுவதும் இந்த நகருக்குள் சூரிய ஒளி வருகிறது. தற்போது இந்த நகரமே பிரகாசமாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved