🔴 LIVE | முப்பெரும் விழா 2023


காதுகளில் தொடர்ச்சியான வலியா? தொண்டை புற்றுநோயாக இருக்க வாய்ப்பு .

உலகளவில் இதய நோய்க்கு அடுத்தபடியாக அதிக மரணத்தினை ஏற்படுத்துவது புற்றுநோயாக உள்ளது. 

புற்றுநோயில் பல வகைகள் இருக்கின்றது. அதில் ஒன்றான தொண்டைப் புற்றுநோயில், புற்றுநோய் செல்களானது தொண்டையில் வளர ஆரம்பிப்பதுடன், மரபணுக்களில் பிறழ்வு ஏற்பட்டு, செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ச்சி அடையும்போது ஏற்படுகின்றது.

இவ்வாறு கட்டுப்பாடு இல்லாமல் வளர்ச்சியடையும் செல்கள் தொண்டையில் கட்டி ஒன்றினை உருவாக்கி தொண்டைப் புற்றுநோயை ஏற்படுத்துகின்றது.

சிகரெட் பிடிப்பது, புகையிலை மெல்லுதல், அதிகப்படியான மதுபானம், வைரல் தொற்றுகள், போதுமான காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ளாமல் இருத்தல், இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) மற்றும் குறிப்பிட்ட நச்சுப் பொருட்களை வெளிப்படுத்தும் வேலையை செய்வது இவைகள் முக்கிய காரணமாகும்.

அறிகுறிகள்:

ஆரம்ப அறிகுறியாக தொண்டை புற்றுநோய் இருந்தால், காதுகளில் தெரியுமாம். காதுகளில் அடிக்கடி அல்லது தொடர்ச்சியான வலி ஏற்படும் இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

தொண்டையில் வலி அல்லது உணவு விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டாலும், இரண்டு வாரங்களுக்கு மேல் தொடரும் தொண்டை கரகரப்பு, தொண்டை அல்லது வாயின் பின்புறத்தில் கட்டிகள், கழுத்துப் பகுதியில் கட்டிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்:

புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் முற்றிலும் அதனை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் தொண்டை புற்றுநோய் வரும் அபாயத்தை குறைக்க முடியும்.

மது அருந்துவதும் தொண்டை புற்றுநோய் ஏற்படுத்தும். மிதமான அளவில் ஒருமுறை எடுத்துக்கொண்டால் பிரச்சினை இல்லை. இதுவே அடிக்கடி எடுத்துக் கொண்டால் கட்டாயம் தொண்டை புற்றுநோயை ஏற்படுத்தும்.

பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவில் அதிகமாக சேர்க்க வேண்டும். ஏனெனில் இவைகளில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உடல் செல்கள் சேதமடைவதைத் தடுத்து உடலை பாதுகாக்கவும், வலிமையுடனும் வைத்துக்கொள்ளும்.

  • Share on
Copied!

Copyrights 2021 Thottianaicker | All Rights Reserved