18-வது நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்வான வெற்றி வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்!
இந்திய நாடாளுமன்ற 18-வது மக்களவைக்கான தேர்தல் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1-ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக நாடுமுழுவதும் நடைபெற்று முடிந்தது. மின்னனு வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும்பணி திட்டமிட்டபடி ஜூன் 4 ஆம் தேதி (நேற்று) காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு சுமார் 8.30 மணியிலிருந்து முன்னனி நிலவரங்கள் வரத்தொடங்கியது.
ஆளும் பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே ஆட்சியமைப்பதில் கடும்போட்டி நிலவும் என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டு வந்தநிலையில், தேர்தலுக்குப்பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட எல்லா முன்னனி ஊடகங்களும் ஆளும் பாஜக கூட்டணிக்கு 350-375 வரை கிடைக்கும் என்றதால் இருதினங்களாக அர்சியல் அரங்கில் பெரும் குழப்பம் நிலவிவந்தது.
ஆனால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து வந்த முடிவுகள் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி இறுதியில் எந்த ஒரு தனிக்கட்சிக்கும் பெரும்பான்மையில்லாத தீர்ப்பை மக்கள் வழங்கி அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சியளித்தனர். மக்கள் அளித்த இந்த தீர்ப்பை அறிவார்ந்த சமூகத்திடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதை சமூக ஊடகங்கள் வாயிலாக காணமுடிகிறது. யாரொருவரும் தன்னிச்சையாக செயல்பட முடியாமல் ஒவ்வொரு கட்சியில் லகானையும் மற்றொரு கட்சியிடம் வழங்கி ஒருவரை ஒருவர் சார்ந்து ஒற்றுமையுடன் இந்தியாவை வழிநடத்துபடி ஆணையிட்டுள்ளது தெளிவாகிறது.
இத்தேர்தலில் தமிழகத்தில் ஆளும்கட்சியான திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணி தமிழகம், புதுச்சேரியுலுள்ள 40 இடங்களையும் கைப்பற்றி மகத்தான வெற்றிபெற்றுள்ளது. எதிர்க்கட்சியான அதிமுக இரண்டாம் இடத்தையும், பாஜக தலைமையிலான தேஜகூ மூன்றாம் இடத்தையும், நாம் தமிழர் கட்சி நான்காம் இடத்தையும் பெற்றுள்ளது.

இதற்கிடையே, இன்று திண்டுக்கல் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் சச்சிதானந்தத்தை திமுக பிரமுகரும், தொழிலதிபருமான பி.அன்பரசு அவர்கள் சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அப்போது மாநில அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர். அதேபோல் திருச்சி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ அவர்களை நெல்லை மாவட்ட 7-வது வட்டச் செயலாளர் மா.மாரிச்சாமி நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
தமிழகத்திலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து கட்சியைச் சேர்ந்த வெற்றி வேட்பாளர்களுக்கும் இராஜகம்பள சமுதாய மக்களின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

